சுயநலவாதியான மனோஜ்… இனியாவை நல்லா போட்ட பாக்கியா… தேவையா தங்கமயில்..

விஜய் டிவியின் இன்றைய எபிசோட்களின் தொகுப்புகள்

By :  Akhilan
Update: 2024-12-20 03:07 GMT
சிறகடிக்க ஆசை - பாக்கியலட்சுமி 

VijayTv: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்புகள்.

பாக்கியலட்சுமி

வீட்டிற்கு வரும் ராதிகா வீட்டை காலி செய்யப் போவதாக உறுதியாக கூறுகிறார். இதில் கோபமாகும் கோபி நான் என் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க கூடாதா என்னை ஏன் இவ்வளவு கொடுமைப்படுத்துகிறாய் என கேட்டு அவருக்கு மயக்கம் வந்துவிடுகிறது. இதில் ஈஸ்வரி, செழியன் கோபியை பரபரப்பாக மருத்துவமனை அழைத்து செல்கின்றனர


வீட்டில் இருக்கும் இனியா உங்களால தான் எங்க டாடிக்கு அவரை கொன்னுடாதீங்க என்கிறார். இதில் கடுப்பாகும் பாக்கியா இனியாவை அறைந்து ரூமுக்குள் செல்ல சொல்கிறார். கோபியை டாக்டர் இந்த நிலைமையில் எதை நினைத்தும் பதட்டப்படக்கூடாது என கூறிக்கொண்டு விடுகிறார்.

அவரை வீட்டிற்கு அழைத்துவரும் ஈஸ்வரி ரூமில் படுக்க வைத்து விட்டு வர ராதிகா கிளம்ப பார்க்கிறார். அவரை நிறுத்தி நீ எப்போ என்னுடைய மகனை விவாகரத்து செய்வ என்று அதிர்ச்சி கொடுக்கிறார் ஈஸ்வரி. இதில் ராதிகா வருத்தப்பட்டு கிளம்பி சென்றுவிட பாக்கியா ஈஸ்வரிடம் கோபப்படுகிறார்.

அவரையும் வாயடைத்து பேசிவிட்டு ஈஸ்வரி உள்ளே சென்றுவிட ஈஸ்வரிடம் இவங்க பையன அவங்க என்ன கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணாங்க. இதெல்லாம் இன்னும் எத்தனை நாள் பாக்கணும் போல இருக்கு என திட்டியபடி செல்கிறார் பாக்கியா. கோபி செந்திலிடம் பேசிக் கொண்டிருக்க இப்படியே இன்னும் எத்தனை நாள் இந்த வீட்ல இருக்க போற எனக் கேட்கிறார்.

சிறகடிக்க ஆசை

வீட்டில் எல்லாரும் பேசிக் கொண்டிருக்க மனோஜ் ஒரு கட்டத்தில் தன்னுடைய சொத்தின் பங்கை பிரித்து தர வேண்டும் என கேட்கிறார். இதற்கு முத்து மற்றும் ரவி இருவரும் மறுப்பு தெரிவிக்கின்றனர். நான் உங்களிடம் பேசவில்லை அப்பாவிடம் தான் பேசுகிறேன் என மனோஜ் கூறுகிறார்.

உனக்கு எல்லா நேரத்திலும் சப்போர்ட் பண்ணி பேசு உங்க அம்மா அமைதியா இருக்கும்போதே உனக்கு தெரியலையா என விஜயாவை காட்டுகிறார். 70 லட்சம் கொடுத்தால் தான் இந்த வீட்டை வாங்க முடியும் என மனோஜ் கூற ரோமயா என்கிற பேரில் ரோ பார்லர் அம்மா பேரு தானே அப்போ அவங்க அப்பா கிட்ட கேட்க சொல்லு என்கிறார் முத்து.

விஜயா மற்றும் மனோஜ் என இருவரும் அதையே கூற ரோகிணி பதட்டத்தில் வித்யாவுக்கு கால் செய்து பேசுகிறார். மீனா அருகில் இருந்து இதை பார்த்துக் கொண்டிருக்கிறார். கடைசியில் அவரும் இல்லை என கூறிவிட்டதாக ரோகிணி சமாளித்து விட நானும் இந்த வீட்டை விற்க முடியாது எனவே விஜயாவும் கூறிவிடுகிறார். ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் மனோஜின் சுயநலம் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2

கிச்சனில் மீனா கோமதியிடம் நான் உங்களிடம் தான் அதிகம் பேசுகிறேன். காரியம் சாதிக்கணும்னு நினைச்சா நான் ஏன் என் புருஷனை பேச வைக்கணும். நானே உங்களிடம் பேசி வாங்கிட மாட்டேனா என கோமதிக்கு அவர் பேசியதை புரிய வைக்கிறார். இது போலவே தங்கமயில் மற்றும் ராஜி இருவரும் தங்களுடைய நிலையை குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே கதிர் வேலைக்கு சென்ற பயத்தில் உள்ளே வந்ததால் செந்தில் இப்படி பேசி விட்டதால் அந்த பதட்டத்தில் பேச தெரியாமல் பேசி விட்டதாக கோமதி இனிமேல் கோபத்தை குறைத்துக் கொள்வதாக கூறிவிடுகிறார். தொடர்ந்து நால்வரும் தங்களுடைய சண்டையை மறந்து சமாதானம் ஆகின்றனர்.

இதைத்தொடர்ந்து தங்கமயில் தன்னுடைய சர்டிபிகேட் மற்றும் போலி நகைகளை எடுக்க அவருடைய அப்பாவை வரக்கூறிவிட்டு ரூமிற்குள் இருக்கிறார். சரவணன் யார் என கேட்க தங்கமயில் அதிர்ச்சி அடைகிறார். பேசியதெல்லாம் தெரியவில்லை போன் சவுண்ட் தான் கேட்டதாக கூற அமைதியாகிறார்.

ராஜி கதிருக்கு கால் செய்து உடம்பு எப்படி இருப்பதாக கேட்டுவிட்டு போனை வைக்கிறார். தூக்கத்தில் இருக்கும் பழனி எழுந்து கதவை செக் செய்துவிட்டு படுக்கிறார். வீட்டிற்கு வரும் அப்பா கதவை திறக்க முடியாமல் தங்க மயிலுக்கு கால் செய்ய அவர் வந்து கதவை திறந்து விடுகிறார். உள்ளே வரும் அவர் கை பட்டு ஜாடி விழப் பார்க்க பழனி எழுந்து விடுகிறார்.

Also Read: கதைய வச்சு செஞ்சிருக்காங்க!.. இந்த மாதிரி ஆளுங்க பார்க்கலாம்.. 'மிஸ் யூ' படத்துக்கு ப்ளூ சட்டை விமர்சனம்..!

Tags:    

Similar News