முத்து செய்த சேட்டை… இனியா குழந்தையா குட்டி சாத்தான்… ஓவரா பேசாதீங்க கோமதி!...
விஜய் டிவியின் தொடர்கள்
VijayTv: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகள்.
சிறகடிக்க ஆசை
மனோஜ் வாங்க இருக்கும் வீட்டில் பேய் இருக்கா என்பதை கண்டுபிடிக்க பேய் கண்டுபிடிப்பவரை அவர் நண்பர் அழைத்து வருகிறார். எல்லாரும் பயத்தில் இருக்க அவர் கையில் இருக்கும் விளக்கு அணையாமல் வீட்டின் விளக்கு அணைந்துவிட்டால் பேய் இருப்பதாக கூறுகிறார். அதுபோல வீட்டின் விளக்கும் அணைந்து விடுகிறது.
மனோஜ் என்ன செய்வது எனக் கேட்க நான்தான் சொன்னேன்ல என்னமோ அந்த ஆளு தள்ளிவிட்டு போய்டான் என ஜன்னலில் இருந்து முத்து சத்தம் போடுகிறார். எல்லாரும் ஷாக்காகி இருக்க மெயினை ஆன் செய்யணும் எனக் கலாய்க்கிறார். கோஸ்ட் ஹண்டர் வீட்டில் பேய் இல்லை என தன்னுடைய ஃபீஸ் 15 ஆயிரம் என்கிறார். அதை மனோஜ் அழுதுக்கிட்டே கொடுக்கிறார்.
பாக்கியலட்சுமி
ராதிகா மயூ பிறந்தநாளுக்கு அழைக்க நாளை வர முடியாது இனியாவின் டான்ஸ் ப்ரோகிராம் இருக்கு என்கிறார். ராதிகா அவ்வளவு தூரம் டிராவல் செய்ய முடியுமா எனக் கேட்க அதெல்லாம் இல்லை என் பொண்ணுதான் முக்கியம் சமாளிச்சிருவேன் என்கிறார். இதில் கடுப்பான ராதிகா கிளம்ப இனியா வந்து ஏன் எங்க டாடியை போக வேண்டாம்னு சொன்னீங்க என்கிறார்.
நான் எப்போ அப்படி சொன்னேன் என ராதிகா கேட்க இப்போ. உங்களுக்கு மயூ பிறந்தநாளுக்கு அவர் வரலைனு கோபம். நானும், அவளும் ஒன்னா? நீங்க எங்க அப்பாவை டைவர்ஸ் செஞ்சிடுங்க. எங்க அம்மா தனியா தான் இருக்காங்க. நீங்களும் தனியா இருங்க என்கிறார். இதனால் ராதிகா கோபமாகி கிளம்பிவிடுகிறார்.
வீட்டிற்கு செல்லும் ராதிகா தன் அம்மாவிடம் இதை சொல்லிவிட்டு வீட்டை காலி செய்வதாக ஓனரிடமும் சொல்லிவிடுகிறார். வீட்டில் பாக்கியா உட்கார்ந்து இருக்க அங்கு வரும் கோபி சாம்பாரை டேஸ்ட் செய்துவிட்டு ஓவராக புகழ்கிறார். இதில் பாக்கியா அவரை திட்டி அனுப்புகிறார்.
ஹாலுக்கு வரும் கோபிக்கு ராதிகா வீட்டு ஓனர் கால் செய்து என்ன இப்படி காலி பண்ணுறீங்க எங்களுக்கு ஆள் கிடைக்க வேண்டாமா எனக் கோபப்படுகிறார். இதில் ஷாக்காகும் கோபி, ராதிகாவுக்கு கால் செய்து வீட்டிற்கு வரச் சொல்கிறார். வீட்டிற்கு வரும் ராதிகாவிடம் கோபி ஏன் இந்த முடிவு என்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்2
செந்தில் மீனா தனக்கு நிறைய செய்கிறாள். ஆனால் நான் அவளுக்கு ஒன்னுமே செஞ்சது இல்லை எனச் சொல்லி புலம்பி செல்கிறார். ஆனால் கோமதி தன்னுடைய கணவர் முகம் சுணங்கி சென்றதையே நினைத்து வருத்தப்பட்டு இருக்கிறார்.
முத்துவேல் மற்றும் சக்திவேல் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போ கோமதி வந்து பழனி கல்யாணம் குறித்து பேசுகிறார். கோபத்தில் கோமதி அமர்ந்து இருக்க மீனா வர அவரிடம் கோபமாக பேசுகிறார். இதில் மீனா கவலையாக சென்று விடுகிறார்.
அடுத்து தங்கமயிலிடமும் எகிற அவரும் ஷாக்காகி சென்றுவிடுகிறார். ராஜியிடம் செந்தில் தப்பா பேசுனான் என்க அவரும் இல்லை எனக் கூற அவரையும் திட்டுகிறார். இதில் ராஜியும் கடுப்பாகி சென்று விடுகிறார். கிச்சனில் நால்வரும் இருக்க அரசி வர மீண்டும் கோமதி கடுப்பாகிறார்.