மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு முதன் முதலில் தீனி போட்ட படம்! வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்தாதான
Anjaan Movie: இன்று டெக்னாலஜியின் ஆதிக்கம்தான் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் நம் வேலையை துரிதப்படுத்தவும் மற்றொருவர்களுடன் ஈஸியாக தொடர்பு கொள்ளவும் எந்தளவு டெக்னாலஜி உதவுகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
அதே வகையில் தீய பழக்கத்திற்கும் ஒரு சில நேரங்களில் அதே டெக்னாலஜியை பயன்படுத்துகிறார்கள். அதனால் தகவல் தொழில் நுட்பத்தால் சில நல்லவைகளும் இருக்கின்றன. சில கெட்டவைகளும் இருக்கின்றன. சினிமாவில் எந்தளவு தகவல் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என அனைவருக்கும் தெரியும்.
இதையும் படிங்க: ஜட்ஜிடமே மல்லுக்கு நின்ன ஈஸ்வரி.. ஏம்மா அவர என்ன உங்க மருமக பாக்கியானா நினைச்சீங்க!..
சமூக வலைதளங்களில் நாம் பதிவிடும் எந்தவொரு கருத்தும் மற்றவர்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். அதே வேளையில் அந்த கருத்துக்கு சுதந்திரமும் வேண்டும். இதுவே சமூகத்தில் பிரபலமாக இருக்கும் நபர் என்றால் கண்டிப்பாக நெட்டிசன்களின் கண்களில் இருந்து தப்பவே முடியாது.
அதே சினிமா பிரபலங்கள் என்றால் சொல்லவா வேண்டும். கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் இந்த மீம்ஸ் என்ற வார்த்தை உருவானதில் இருந்து ஒரு சில பிரபலங்களே தன் புகைப்படத்தையோ அல்லது கருத்தையோ முன்வைக்க தயங்குகின்றனர்.
இதையும் படிங்க: மீனாவும், முத்துவும் ரொமான்ஸ் பண்ணுற சீன்லாம் வைக்கிறாங்கப்பா!.. ஒரே குஷி தான் போல!
அந்தளவுக்கு மீம்ஸ் கிரியேட்டர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த மீம்ஸ் என்ற வார்த்தை உருவாகும் நேரத்தில் அஞ்சான் திரைப்படம் ரிலீஸ் ஆனது. சொல்லப்போனால் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு தீனி போட்ட முதல் படமாக இந்த அஞ்சான் திரைப்படம் அமைந்தது என தம்பிக்கோட்டை பட இயக்குனர் கூறினார்.
அஞ்சான் திரைப்படம் நல்லப் படம்தான். ஆனால் அதன் விழாவில் லிங்குசாமி பேசிய பேச்சுத்தான் நெட்டிசன்களை கடுப்படைய வைத்துவிட்டது. அதன் காரணமாகத்தான் அஞ்சான் திரைப்படத்தை கழுவி கழுவி ஊற்றினார்கள் என்றும் அந்த இயக்குனர் கூறினார்.
இதையும் படிங்க: விவகாரமான ரம்பா பேட்டி!.. வேட்டையன் படத்தில் கரன்ட் கட் ஆகிடப் போகுது.. புளூ சட்டை மாறன் தாக்கு!..