விஷால் கொளுத்தி போட்ட வெடி… ஆனா அதுக்கு பின்னாடி இவ்ளோ அர்த்தம் இருக்கா!..
விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும் சண்டகோழி, தாமிரபரணி போன்ற படக்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளாத்தை சம்பாதித்தார்.
இதன் பின் இவர் நடித்த சிவப்பதிகாரம், தோரணை போன்ற திரைப்படங்கள் இவருக்கு தோல்வியை சந்தித்து கொடுத்தன. இவர் பின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என தனக்கென சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் தனது படங்களை தானே தயாரித்தும் கொண்டார்.
இதையும் வாசிங்க:ஃபிளாப்புக்காக மறுபடி ஒரு படம்!. ஆனா சரத்குமார் செஞ்ச வேலையில சின்னாபின்னமான விஷால் அப்பா!..
பாண்டிய நாடு, பூஜை, ஆம்பள போன்ற படங்களை தயாரித்தும் நடித்தும் வெளியிட்டார். ஆனால் இப்படங்களும் இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். இவ்வாறாக பல ஆண்டுகளாக தோல்வியை மட்டுமே சம்பாதித்து வந்த விஷாலுக்கு சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் கை கொடுத்தது.
நீண்ட நாட்களுக்கு பின் விஷால் நடிப்பில் வெளியான படம் வெற்றி கண்டது இப்படத்தில்தான். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நிழல்கள் ரவி போன்ற பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இப்படம் இன்னமும் பல தியேட்டர்களில் வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது.
இதையும் வாசிங்க:அப்பானு கூட யோசிக்காம விஷால் செஞ்ச வேலைய பாருங்க!… அப்பாகிட்ட பேசுற பேச்சா இது?…
இப்படத்தின் வெற்றி விழாவில் விஷால் பேசியபொழுது அவர் சொன்ன ஒரு வார்த்தை சர்ச்சையை கிளப்பியது. அதாவது 4 கோடிக்கு குறைவான பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் அப்படத்தினை எடுப்பதை காட்டிலும் அப்பணத்தை குழந்தைகளின் பெயரில் சேமித்து வைப்பதே நல்லது என கூறினார்.
இவர் கூறிய இந்த வார்த்தை ரசிகர்கள் மற்றும் இளம் இயக்குனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் அவர் கூறுவதற்கு பின்னால் நியாயமான ஒரு அர்த்தமும் உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இக்காலத்தில் வளர்ந்த இயக்குனர்களுக்கே தங்களது படத்தினை ரிலீஸ் செய்வதற்கு தியேட்டர்கள் கிடைப்பது கடினமாக இருந்து வருகிறது.
இதையும் வாசிங்க:உயிர கொடுத்து நடித்த எஸ்.ஜே.சூர்யா!. நோகாம நொங்கு தின்ன விஷால்!.. மார்க் ஆண்டனி பரிதாபங்கள்!..
அதைபோல் சில இயக்குனர்களின் படங்கள் வராமலும் போகிறதாம். இத்தகைய சூழலில் அப்பணத்தினை இவ்வாறு வீணடிக்காமல் சேமித்து வைக்கலாம் என்ற ஒரு நல்ல எண்ணத்தில்தான் விஷால் இவ்வாறு பேசியுள்ளார் என வலைதளவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.