தளபதி 68-ல் மேலும் ரெண்டு ஹீரோக்கள்!. வேலையை காட்டும் வெங்கட்பிரபு!. பிரேம்ஜி மட்டும்தான் பாக்கி!...

லோகேஷின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்த படத்திற்கு ரெடியாகி வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கவுள்ளார். சென்னை 28, மங்காத்தா, மாநாடு போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இவர். மாநாடு படத்திற்கு பின் வெங்கட்பிரபு இயக்கியுள்ள கஸ்டடி படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவானது. ஆனால், இப்படம் ஃபிளாப் ஆகிவிட்டது. இந்த நிலையில்தான் விஜய்க்கு கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளார் வெங்கட்பிரபு. விஜயிடம் […]

Update: 2023-08-23 02:40 GMT

லோகேஷின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்த படத்திற்கு ரெடியாகி வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கவுள்ளார். சென்னை 28, மங்காத்தா, மாநாடு போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இவர்.

மாநாடு படத்திற்கு பின் வெங்கட்பிரபு இயக்கியுள்ள கஸ்டடி படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவானது. ஆனால், இப்படம் ஃபிளாப் ஆகிவிட்டது. இந்த நிலையில்தான் விஜய்க்கு கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளார் வெங்கட்பிரபு. விஜயிடம் சொன்ன ஒன்லைனை இப்போது திரைக்கதையாக எழுதி வருகிறார்.

இதையும் படிங்க: இவன் மட்டும் வேணாம்! அவனும் வேணும்… அடம் பிடிக்கும் தளபதி! கோலிவுட்டின் புதுக்கதை!

உதவியாளர்களுடன் ஆலோசித்து திரைக்கதை எழுதினால் கதை வெளியே லீக் ஆகிவிடும் என யோசித்து ஒத்த ஆளாக இப்படத்தின் கதையை விறுவிறுப்பாக எழுதி வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பல வருடங்கள் கழித்து விஜயின் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

மேலும், இப்படத்தில் ஜோதிகா நடிக்கவுள்ளதாக முதலில் செய்திகள் வெளியானது. அதன்பின் இப்படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. அதன்பின் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், இரண்டு கதாநாயகிகள் எனவும் சொல்லப்பட்டது.

இதையும் படிங்க: முடியாத லியோ ஆடியோ லான்ச் பஞ்சாயத்து… கடைசி நேரத்தில் கட்டையை போட்ட தளபதி… அட போங்கப்பா!….

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் பிரபுதேவா மற்றும் நடிகர் மாதவன் என இருவரும் நடிக்கவுள்ளதாக தற்போது செய்திகள் வெளியே கசிந்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் விஜயின் தம்பியாக ஜெய் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. வெங்கட்பிரபு என்றாலே 5 பேரை வைத்து படம் எடுப்பார்.

இப்போது விஜய் படத்திலும் அதே வேலையை காட்ட துவங்கிவிட்டார். விஜய் எப்படி இதற்கு ஒத்துகொண்டார் என தெரியவில்லை. அடுத்து பிரேம்ஜியும் இப்படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை.

இதையும் படிங்க: ஒரு வழியா முடிவுக்கு வந்தாச்சி!. லியோ ஆடியோ லான்ச் இங்கதானாம்!.. இதத்தான் எதிர்பார்த்தோம்!..

Tags:    

Similar News