எனக்கு வாழ்க்கை கொடுத்தவரே வடிவேலு தான்… பெற்றோருக்கு மேல் அவர்!... புகழ்ந்த பிரபல நடிகர்…
Vadivelu: நடிகர் வடிவேலு தன்னுடைய சக நடிகர்களிடம் இருந்து தொடர்ந்து வசைபாடல்களே வாங்கி வந்தார். ஆனால் முதல்முறையாக பிரபல நடிகர் ஒருவர் வடிவேலு தான் தனக்கு வாழ்க்கை கொடுத்ததாக கூறுகிறார். இது பலருக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் வடிவேலு. அவரின் திறமைக்கு எக்கசக்க ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அவர் பொதுமேடையில் விஜயகாந்தை மோசமாக விமர்சித்தார். அது பலரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவருடன் நடித்த நடிகர்கள் வரிசையாக அவர் […]
Vadivelu: நடிகர் வடிவேலு தன்னுடைய சக நடிகர்களிடம் இருந்து தொடர்ந்து வசைபாடல்களே வாங்கி வந்தார். ஆனால் முதல்முறையாக பிரபல நடிகர் ஒருவர் வடிவேலு தான் தனக்கு வாழ்க்கை கொடுத்ததாக கூறுகிறார். இது பலருக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் வடிவேலு. அவரின் திறமைக்கு எக்கசக்க ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அவர் பொதுமேடையில் விஜயகாந்தை மோசமாக விமர்சித்தார். அது பலரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவருடன் நடித்த நடிகர்கள் வரிசையாக அவர் மீது பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர்.
இதையும் படிங்க: மாட்டிக்கினாரு ஒருத்தரு!.. மனோஜால் விஜயாவிடம் வசமாக சிக்கிய ரோகினி…போச்சா?
அவர் எங்கள் வாய்ப்புகளை பறித்தார். எங்களுடன் அப்படி நடந்து கொண்டார். இப்படி அவருடன் நடித்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் பேட்டியே தொடர்ந்து வைரலாகி வந்த நிலையில் முதல்முறையாக நடிகர் ஒருவர் வடிவேலு தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தார் எனக்கூறி இருப்பது ஆச்சரியத்தினை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் கிங்காங் கொடுத்த பேட்டியில், வாய்ப்பு இருக்கும் போது அவரை பெருமையாக பேசியவர்கள். வாய்ப்பு இல்லாமல் போன நிலையில் அவரை தப்பாக பேசுவதாக நான் நினைக்கவே இல்லை. அது அவர்களின் எண்ணம். அதில் நாம் கருத்து சொல்ல கூடாது.
இதையும் படிங்க: களைக்கட்டும் கோபி தொழில்… சுணங்கும் பாக்கியா… டைரக்டர் சாரே ஏன் இப்படி?
நான் வடிவேலு மீது இன்னும் மரியாதை வைத்திருக்கேன். அவரை நான் பெருமையாகவே தான் நினைப்பேன். ஒவ்வொரு மேடையிலும் கலைப்புலி சேகர், வடிவேலுவுக்கு நன்றி சொன்ன பின்னர் தான் பெற்றோர்களுக்கு நன்றி சொல்வேன் எனவும் கூறி இருக்கிறார்.
மேலும், அவர் என்னை ஒதுக்கினாலும் கூப்பிட்டாலும் எனக்கு கவலையே இல்லை. அவர் மீது எனக்கு தனிமரியாதை தான் எப்போதுமே. நான் நிறைய படங்களில் நடித்து இருந்தாலும் அவருடன் நடித்த போக்கிரி திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரீச் கொடுத்தது. அந்த நன்றி என்றுமே எனக்கு இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: கமல் எட்டி உதைத்ததில் காற்றில் பறந்த சேர்… பதறியடித்த படக்குழு!.. நடந்தது இதுதான்!..