யுவன் ஷங்கர் ராஜா செய்த காரியம்... குஷியில் ப்ரேம்ஜி... கடுப்பில் வெங்கட் பிரபு
யுவன் சங்கர் ராஜா, ப்ரேம்ஜி மற்றும் வெங்கட் பிரபு இடையே உள்ள நட்பு ஏற்கனவே சமூக வலைத்தளம் அறிந்ததே. தற்போதைய ஹாட் டாப்பிக்கை இறக்கி வெங்கட் பிரபுவினை யுவன் அழுகவிட்ட புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் இசைஞானி எனப் புகழப்படும் இளையராஜாவின் மகன் தான் யுவன் ஷங்கர் ராஜா. இவரும் கோலிவுட்டில் இசையமைப்பாளராக இருக்கிறார். இளசுகளுக்கு யுவன் பாடல்களே பல விஷயங்களுக்கு மருந்தாக இருக்கிறது. இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் மகன்கள் தான் […]
யுவன் சங்கர் ராஜா, ப்ரேம்ஜி மற்றும் வெங்கட் பிரபு இடையே உள்ள நட்பு ஏற்கனவே சமூக வலைத்தளம் அறிந்ததே. தற்போதைய ஹாட் டாப்பிக்கை இறக்கி வெங்கட் பிரபுவினை யுவன் அழுகவிட்ட புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் இசைஞானி எனப் புகழப்படும் இளையராஜாவின் மகன் தான் யுவன் ஷங்கர் ராஜா. இவரும் கோலிவுட்டில் இசையமைப்பாளராக இருக்கிறார். இளசுகளுக்கு யுவன் பாடல்களே பல விஷயங்களுக்கு மருந்தாக இருக்கிறது.
இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் மகன்கள் தான் வெங்கட் பிரபு மற்றும் ப்ரேம்ஜி. இவர்கள் மூவரும் அவ்வப்போது இணைந்து நேரம் செலவழிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்களாம். அதுகுறித்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
இதையும் படிங்க: விஜயால் வந்த சோதனை!.. வேதனையில் போட்ட ட்விட்டை நிமிஷத்தில் அகற்றிய விஷால்!.. என்ன நடந்துச்சோ?..
இதில் ரொம்பவே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ப்ரேம்ஜி, யுவனிடம் இருந்து ஐபோன் மொபைலை பரிசாக வாங்கியதாக ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் ப்ரேம்ஜிக்கு பக்கத்தில் சோகமான முகத்துடன் வெங்கட் பிரபு நிற்கிறார்.
இதுவும் இவர்கள் மூவரின் சேட்டை தான். யுவன் இன்னொரு ஐபோனை இயக்குனருக்கு கொடுத்துட வேண்டியது தானே என கமெண்ட்டுகளும் தெறித்து வருகிறது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.