அஜித்தோடு ஒப்பிட்டு வெங்கட்பிரபு சொன்ன ஒரு வார்த்தை.. மொத்தமா சரண்டரான சிம்பு!...
Actor str: தமிழ் சினிமாவில் எப்போதும் சர்ச்சை நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரை வம்பு நடிகர் என்றே பல பத்திரிக்கைகளும் எழுவதுவார்கள். அதற்கேற்ப அவரும் பல வம்புகளை செய்தவர்தான். அப்பா டி.ராஜேந்தரால் சிறுவனாக இருக்கும்போதே சினிமாவில் நுழைந்து ஹிட் படங்களை கொடுத்தவர்.
அதே அப்பாவின் இயக்கத்தில் ‘காதல் அழிவதில்லை’ படம் மூலம் நடிக்க துவங்கினார். சிறு வயதிலிருந்து சினிமாவில் இருப்பதால் கதை எழுதுவது, பாடல் எழுதுவது, இசை அறிவு, பாடுவது, இயக்கம், தயாரிப்பு, எடிட்டிங், கேமரா கோணங்கள் என சினிமாவில் எல்லாமே சிம்புவுக்கு அத்துப்படி.
இதையும் படிங்க: கழட்டிவிட்ட ரஜினி!. கை கொடுத்த சிம்பு!.. உலக நாயகன் உள்ள வந்தது இப்படித்தான்!.
இவ்வளவு இருந்தும் சினிமாவில் பல இறக்கங்களை பார்த்தவர்தான் இவர். பல சமயம் அதற்கு காரணமாக அவரே இருந்தார் என்பதுதான் உண்மையும் கூட. அடிப்படையில் மிகவும் சோம்பேறி இவர். அதனால், படப்பிடிப்புக்கு சொன்ன நேரத்திற்கு போக மாட்டார். இதனால், பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கோபத்திற்கு ஆளானார்.
சம்பள விஷயத்தில் அவரின் அப்பா டி.ராஜேந்தர் மற்றும் அம்மா உஷா ஆகியோர் தயாரிப்பாளரிடம் சண்டை போடுவார்கள். படப்பிடிப்பு நடக்கும் அன்று அதில் சிம்பு கலந்துகொள்ளமாட்டார். பாதி படம் முடியும் நிலையில் கதையை மாற்ற சொல்வார். இப்படி அவர் மீது பல புகார்களும் இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் எப்போதும் யாராவது ஒருவர் சிம்பு மீது புகார் கொடுத்துக்கொண்டே இருப்பார்.
இதையும் படிங்க: 10வது படிக்கும்போதே லவ் ஃபெயிலரான சிம்பு!. அட இப்ப வரைக்கும் அது ரிப்பீட்டு!..
ஆனாலும், அவ்வப்போது ஹிட் படங்களை கொடுப்பதால் சிம்புவின் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. சரியான மார்க்கெட்டே இல்லாத நேரத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த திரைப்படம் மாநாடு. உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியதோடு, இந்த படத்தில் நன்றாகவும் நடித்திருந்தார்.
இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து ரூ.90 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் உருவானபோதும் சிம்பு தனது வேலையை காட்டினார். இதனால் பல மாதங்கள் படப்பிடிப்பு தள்ளிப்போனது. அப்போது சிம்புவிடம் ‘என்னை நம்பி வந்து நடிங்க புரோ.. அஜித் சாருக்கு ஒரு ‘மங்காத்தா’ கொடுத்த மாதிரி உங்களுக்கு இந்த படம் அமையும்’ என வெங்கட்பிரபு சொல்லியதால் மனதை மாற்றிகொண்டு சிம்பு நடித்தார். அவர் சொன்னது போலவே சிம்புவுக்கு இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.
இதையும் படிங்க: நடிகைகள் மட்டுமா? சிம்புவை நம்பி தெருவில் நின்னவங்க பல பேரு!.. அட இத்தனை பேரா?…