கழட்டிவிட்ட ரஜினி!. கை கொடுத்த சிம்பு!.. உலக நாயகன் உள்ள வந்தது இப்படித்தான்!.

Rajnikanth: கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடித்து உருவாகவுள்ள படத்தின் வேலைகள் இப்போது சூடுபிடித்துள்ளது. இது ஒரு சரித்திர கதை எனவும், சிம்பு நடித்ததிலேயே இப்படம் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படம் உருவான பின்னணி பற்றி தெரிந்துகொள்வோம். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. இவர் ரஜினியின் தீவிர ரசிகர். இப்படம் பற்றி ரஜினி என்னை பாராட்டி பேசினால் அதை விட மகிழ்ச்சியே இல்லை என சொன்னவர்.

இதையும் படிங்க: 10வது படிக்கும்போதே லவ் ஃபெயிலரான சிம்பு!. அட இப்ப வரைக்கும் அது ரிப்பீட்டு!..

அவரின் ஆசை ரஜினிக்கு எட்ட அவரை செல்போனில் அழைத்து பாரட்டிய ரஜினி நேரில் வர சொல்லி, ‘எனக்கும் ஒரு கதை இருந்தால் ரெடி பண்ணுங்க’ என சொல்ல ‘ரெண்டு லட்டு தின்ன ஆசையா’ என சில மாதங்களில் ஒரு கதையை உருவாக்கினார். அது ஒரு சரித்திர கதை என்பதால் அதிக பட்ஜெட்டில் உருவாக்க வேண்டியிருந்தது.

இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கிவிடுவாரா என யோசித்த ரஜினி அவரை அழைத்து ‘நாம் கண்டிப்பாக இணைந்து ஒரு படம் செய்வோம்’ என சொல்லி அனுப்பிவிட்டார். அதன்பின் இந்த கதையை சிம்புவிடம் பெரியசாமி சொல்ல அவருக்கு கதை பிடித்துப்போய் அவரை அழைத்துக்கொண்டு ஐசரி கணேசனிடம் சென்றார்.

இதையும் படிங்க: நடிகைகள் மட்டுமா? சிம்புவை நம்பி தெருவில் நின்னவங்க பல பேரு!.. அட இத்தனை பேரா?…

கதையை கேட்ட ஐசரி கணேசன் இந்த படத்தை தாணுவால் மட்டுமே எடுக்க முடியும் என சொல்லி அவரிடம் அனுப்பி வைத்தார். கதையை கேட்ட தாணு இந்த கதையில் கமல்ஹாசன் நடித்தால் நன்றாக இருக்கும். அவரை போய் பாருங்கள் என சொல்லி அனுப்பிவிட்டார்.

இந்த கதை கமலுக்கும் பிடித்திருந்தது. ஆனால், இந்தியன் 2, ஹெச்.வினோத், மணிரத்னம் என அடுத்தடுத்து படங்கள் இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை. எனவே, ராஜ்கமல் சார்பில் சிம்புவை அழைத்து ‘நீங்கள் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தால் நாங்கள் தயாரிக்கிறோம்’ என சொல்ல சிம்புவும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டாராம்.

இதையும் படிங்க: ஹீரோயின்ஸ் பாத்தா கொத்திட்டு போய்டுவாங்க!.. லண்டனில் ஸ்டைலீஸ் லுக்கில் ஊர் சுற்றும் சிம்பு!..

 

Related Articles

Next Story