Exclusive: களமிறங்கும் இளைய தளபதி… ஜேசன் சஞ்சயின் இண்ட்ரோ வேற லெவலால இருக்கு!

தமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது கோலிவுட்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்து விட்டார். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மகனாக இருந்தாலும் முதல் சிலபடங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் தான் நடிகர் விஜய். இருந்தும் மனம் தளராமல் தொடர்ச்சியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு கோட்டையை பிடித்து வைத்துஇருக்கிறார். இதையும் படிங்க: கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்… எரிச்சலாகி கத்திய ரஜினிகாந்த்.. சூப்பர் அட்வைஸ் சொன்ன இயக்குனர்! அவரின் வைராக்கியத்தால் […]

By :  Akhilan
Update: 2023-08-28 04:23 GMT

தமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது கோலிவுட்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்து விட்டார். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மகனாக இருந்தாலும் முதல் சிலபடங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் தான் நடிகர் விஜய். இருந்தும் மனம் தளராமல் தொடர்ச்சியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு கோட்டையை பிடித்து வைத்துஇருக்கிறார்.

இதையும் படிங்க: கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்… எரிச்சலாகி கத்திய ரஜினிகாந்த்.. சூப்பர் அட்வைஸ் சொன்ன இயக்குனர்!

விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது கோலிவுட்டின் இயக்குனராகி விட்டார். இவரின் அறிமுக படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. சுபாஸ்கரன் தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு இன்று ஜேசன் சஞ்சய் தனது கையெழுத்தினை போட்டு விட்டார். அதுகுறித்த புகைப்படங்களை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ரியல் லைஃப் ரோமியோ-ஜூலியட்… லவ்வில் பிணைந்த ஐஸ்வர்யா-சல்மான்கான்… ப்ரேக்அப் எப்படி ஆச்சு தெரியுமா?

முதன்முதலில் விஜயின் கத்தி படத்தினை தயாரித்த லைகா நிறுவனம் தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்ப்பினை சந்தித்தது. இருந்தும் போராடி இன்று முன்னணி நாயகர்களின் படங்களினை தயாரித்து வரும் நிலையில் அடுத்த தலைமுறைகளுக்கும் வாய்ப்பு கொடுத்து வருவது பாராட்ட வேண்ட விஷயம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டரில் ஜேசனுக்கு தொடர்ச்சியாக வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் இருக்கிறது. வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு விஜயுடன் சில நிமிடங்கள் ஜேசன் நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News