அந்த சம்பவத்தை மறக்க மாட்டேன்.. விஜய் டிவி லேடி செய்த மோசமான செயல்... நொறுங்கி போன நாஞ்சில் விஜயன்.!

by Manikandan |   ( Updated:2022-08-24 13:36:40  )
அந்த சம்பவத்தை மறக்க மாட்டேன்.. விஜய் டிவி லேடி செய்த மோசமான செயல்... நொறுங்கி போன நாஞ்சில் விஜயன்.!
X

தமிழ் தொலைக்காட்சிகளில், மிகவும் பிரபலமாக இருக்கும் தொலைக்காட்சிகளில் மிக முக்கியமானது விஜய் டிவி. இதில் புது புது நிகழ்ச்சிகள் புகுத்தி ரசிகர்களை ரசிக்க வைப்பார்கள். திறமையானவர்களை மேடையேற்றி அழகு பார்க்கவும் செய்வார்கள்.

அதில் ஒருவர் தான் நாஞ்சில் வீஜயன். இவர், சிரிச்சா போச்சு எனும் நிகழ்ச்சி மூலம் மக்களை சிரிக்க வைத்தவர். இவர் பல்வேறு விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

அப்படி ஒரு நிகழ்ச்சியில் நடந்த ஒரு சோக சம்பவத்தை நாஞ்சில், ஒரு நேர்காணலில் மன வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், ' நான் ஒரு முறை ஷூட்டிங்கில் இருக்கும் போது, ஒருவரை கலாய்த்து விட்டேன். என்னையும் நிறைய பேர் கலாய்த்து இருக்கின்றனர்.

இதையும் படியுங்களேன் - ஜெயிலர் படத்தின் வெறித்தனமான அப்டேட் இதோ!...இந்த வீடியோவை சத்தியமா எதிர்பாக்கல!....

அது எல்லாம் ஷோவுக்காக என இருந்துள்ளேன். ஆனால், அந்த ஷோ முடிந்ததும். நான் பேர் சொல்ல விரும்பல. ஆனால் விஜய் டிவியை சேர்ந்த பெண் பிரபலம் தான். அவர் என்னை கூப்பிட்டு , நீ என்ன ஓவராக கலாய்க்கிற.? என கேட்டுள்ளார். என்னை கூட தான் நிறைய கலாய்க்கிறீங்க, ஏன், என்னைய ஆம்பளையே இல்லனு கூட கலாய்ச்சிருக்கீங்க. அது ஷோவுகுத்தான் என கூறி கிளம்பிட்டேன்.

இதையும் படியுங்களேன் -தமிழ் சினிமாக்காரர்கள் ஷாருக்கானை பார்த்து கத்துக்கோங்க... அந்த ஊரு கேப்டன் விஜயகாந்த் இவர் தான்.!

ஆனால் அந்த லேடி, அத்தனை பேர் முன்னாடி என்னை கெட்ட வார்த்தை போட்டு திட்டுனாங்க.. இந்த வீடியோ பாக்குற அவவங்களுக்கு தெரியும்.' என மன வருத்தத்துடன் கூறிவிட்டு சென்றார்.

Next Story