நண்பர் பெயரில் பல கோடி சொத்து!.. விஜயகாந்த் செய்த தரமான சம்பவம்!.. அவ்வளவு நம்பிக்கையா?!..

சினிமாவில் நடிக்கும் ஆசையில் மதுரையிலிருந்து சென்னை வந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்தான் விஜயகாந்த். எம்.ஜி.ஆர் பாணியில் துவக்கம் முதலே ஆக்சன் படங்களில் நடித்து ஒருகட்டத்தில் அரசியலுக்கும் போனவர் இவர். எம்.ஜி.ஆரை போலவே மக்களின் மனதில் நல்லவர் என்கிற இமேஜை உருவாக்கியதுதான் விஜயகாந்தின் பெரிய வெற்றி. நிஜ வாழ்விலும் உண்மையான, எல்லோருக்கும் உதவும் குணம் கொண்ட, வெள்ளந்தியான, வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர் விஜயகாந்த். அதனால்தான் அவரை எல்லோருக்கும் பிடித்துப்போனது. பெரும்பாலான படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். […]

Update: 2024-05-28 02:04 GMT

vijayakanth

சினிமாவில் நடிக்கும் ஆசையில் மதுரையிலிருந்து சென்னை வந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்தான் விஜயகாந்த். எம்.ஜி.ஆர் பாணியில் துவக்கம் முதலே ஆக்சன் படங்களில் நடித்து ஒருகட்டத்தில் அரசியலுக்கும் போனவர் இவர். எம்.ஜி.ஆரை போலவே மக்களின் மனதில் நல்லவர் என்கிற இமேஜை உருவாக்கியதுதான் விஜயகாந்தின் பெரிய வெற்றி.

நிஜ வாழ்விலும் உண்மையான, எல்லோருக்கும் உதவும் குணம் கொண்ட, வெள்ளந்தியான, வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர் விஜயகாந்த். அதனால்தான் அவரை எல்லோருக்கும் பிடித்துப்போனது. பெரும்பாலான படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்தார்.

இதையும் படிங்க: கேப்டன் டிவி ஆரம்பிச்சதும் விஜயகாந்த் போட்ட முதல் கண்டிஷன்! அட இந்தளவுக்கு நல்லவரா?

‘நீங்கள் ஏன் போலீஸ் அதிகாரியாகவே அதிகம் நடிக்கிறீர்கள்?’ என ஒருமுறை கேட்டபோது ‘போலீஸ் வேலை எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில், தவறுகளை தட்டி கேட்கும் உரிமை அவர்களுக்கு அதிகம். அது அவர்களின் வேலை மட்டுமல்ல. கடமையும் கூட’ அதனால் என்னவோ போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பிடிக்கும்’ என சொல்லி இருக்கிறார் விஜயகாந்த்.

சில மாதங்களுக்கு முன்பு அவர் மரணமடைந்த போது தமிழ்நாடே அவருக்காக உருகியது. ஒரு நல்ல மனிதர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்கிற துக்கம் பலருக்கும் இருந்தது. அதுதான் விஜயகாந்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. அவரின் இறுதி ஊர்வலத்தில் 16 லட்சம் பேர் கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. இது எம்.ஜி.ஆருக்கு கூடியதை விட அதிகம்.

இதையும் படிங்க: விஜயகாந்த் குடும்பத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்! தளபதினா சும்மாவா?

விஜயகாந்துக்கு திருமண மண்டபம், கல்லூரி என சில சொத்துக்கள் இருக்கிறது. இதில், அவரின் மண்டபத்தை பாலம் கட்டுவதாக சொல்லி அரசு தரப்பில் இடிக்கப்பட்டது. ஒருபக்கம், தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரில் விஜயகாந்த் பல சொத்துக்களை வாங்கி இருப்பது தெரியவந்திருக்கிறது.

பிரபல பத்திரிக்கை ஒன்றில் பத்திரிக்கையாளராக பணிபுரிந்தும் ஒருவருக்குதான் விஜயகாந்த் சொத்துக்களை எழுதி கொடுத்திருக்கிறார் என சொல்லப்படுகிறது. அவரின் மீது விஜயகாந்துக்கு எப்போதும் நம்பிக்கை அதிகம் எனவும், அதனால்தான் அவருக்கு சொத்துக்களை எழுதி கொடுத்திருக்கிறார் எனவும், அதன் மதிப்பு பல கோடிகள் எனவும் சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News