சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா… லியோ படத்துக்கு பெரிய ஆப்பாய் வைத்த சென்சார்!

by Akhilan |
சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா… லியோ படத்துக்கு பெரிய ஆப்பாய் வைத்த சென்சார்!
X

லியோ படத்தின் வேலைகள் எல்லாம் இறுதிக்கட்டத்தினை நெருங்கி விட்டது. படத்தின் ரிலீஸ் வேலைகள் படு ஜோராக நடந்து வரும் நிலையில் லியோவின் சென்சார் ரிசல்ட் குறித்த சில சர்ச்சை தகவல்கள் வெளியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தான் லியோ. படத்தின் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து பல புதிய தகவல்களால் இணையமே தெறித்து வருகிறது.

அந்தோணி தாஸாக நடிக்கும் சஞ்சய் தத் வீடியோ வெளியாகி வைரலான நிலையில், ஹரோல்ட் தாஸ் வீடியோ வெளியாகி பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இதை தொடர்ந்து சண்டை காட்சிகள் பயங்கரமாக இருக்கும். அன்பறிவு மாஸ்டரின் பைட் கோரியோ மாஸாக அமைக்கப்பட்டுள்ளதாக பல தரப்பிலும் பேச்சுகள் அடிப்பட்டது.

இதையும் படிங்க : ரஜினி செஞ்ச வேலை!.. மொத்தமும் குளோஸ்!. பாக்ஸ் ஆபிசிலிருந்து வெளியேறிய ஜெயிலர்!..

ஆனால் இப்படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்த எந்தவித புதிய தகவல்களுமே வெளியாகவில்லை. அதில் பெரிய அளவில் சஸ்பென்ஸினை லோகேஷ் காப்பாற்றி வருகிறார். படத்தின் ஆடியோ ரிலீஸ் வேறு ஒரு பக்கம் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இங்கையா? அங்கையா? என பல கேள்விகள் எழுந்து வருகின்றன.

இருந்தும், அதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. தற்போதைய முக்கிய வேலையே சென்சார் எடுப்பது தான். அதற்கான பணிகளில் படக்குழு இறங்கி இருக்கிறது. இப்படத்தில் வன்முறை காட்சிகள் நிறைய இருப்பதாகவும், புகைப்பிடிக்கும் காட்சிகளும் இருக்கிறது.

இதையும் படிங்க : சந்திரமுகி 2-வில் வேலையை காட்டிய லாரன்ஸ்!.. வெறுத்து போய் புலம்பும் பி.வாசு.. லக்கலக்க லக்க!..

இதனால் லியோ படத்துக்கு கண்டிப்பாக ஏ சர்டிபிக்கேட் தான் கொடுப்பார்கள் என தற்போதே இணையத்தில் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அப்படி ஏ கொடுத்து விட்டால் ஃபேமிலி ஆடியன்ஸால் படத்தினை பார்க்க முடியாது. இது படத்தின் வசூலில் மிகப்பெரிய அடியாக இருக்கும்.

பெரும்பாலும், காட்சிகளை வெட்டி விட்டு யூ/ஏ கொடுக்கப்படவே அதிக வாய்ப்பு இருப்பதாக நம்பதகுந்த வட்டாராத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கிறது. செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் நடக்க இருக்கும் சென்சார் காட்சிக்கு பின்னர் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story