Connect with us
LAWRENCE

Cinema News

சந்திரமுகி 2-வில் வேலையை காட்டிய லாரன்ஸ்!.. வெறுத்து போய் புலம்பும் பி.வாசு.. லக்கலக்க லக்க!..

நடிகர் லாரன்ஸ் முனி, காஞ்சனா, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ருத்ரன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இவர் அடுத்ததாக சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறாரர்.

இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை சந்திரமுகி படத்தை இயக்கிய பி.வாசு தான் இயக்குகிறார். ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி.

இதையும் படிங்க- ரஜினியின் ஐடியாலஜி! நல்லா வொர்க் அவுட் ஆயிடுச்சு போல – ‘சந்திரமுகி 2’வில் மாஸ் காட்டிய லாரன்ஸ்

இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகளுக்கும் மேலான பிறகு, தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவட், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் குறித்து சமீபத்திய பேட்டியில் இயக்குநர் பி.வாசு பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், வடிவேலு இதுவரை எந்த படத்திற்கும் என்னிடம் கதை கேட்டதே இல்லை. சந்திரமுகி படத்திற்கும் கேட்கவில்லை, சந்தரமுகி 2 படத்திற்கும் கேட்கவில்லை. லாரன்ஸ் அவராகவே எனக்கு அழைத்து சந்திரமுகி 2 படத்தின் கதையை கேட்டார். உடனே அவர் தான் ஹீரோ என்று முடிவு செய்துவிட்டேன். 

பொதுவாகவே லாரன்ஸின் நடிப்பு ரஜினியை போலவே இருக்கும். இனனும் சில நடிகர்கள் கூட அப்படி தான் நடிப்பார்கள். ஆனால் இந்த படத்தில் ரஜினியை போல இருக்கக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் லாரன்ஸ்க்கு அப்படி வரவில்லை.

அவர் ரஜினியை போலவே நடித்துக்கொண்டிருந்தார். அவரின் அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டி இருந்தது. படத்திலேயே அது தான் கஷ்டமான விஷயம் என்றே கூறலாம். ரஜினியை போல நடிக்காதீர்கள் என்று கூறிக்கொண்டே இருந்தேன் என்று இயக்குயர் பி.வாசு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- சந்திரமுகி 2 படத்திலும் வடிவேலுவின் அட்ராசிட்டி!.. ரெடியா இருங்க மக்களே!…

google news
Continue Reading

More in Cinema News

To Top