அடுத்த நயன்தாரா ரெடி!.. விஸ்வாசம் பட அனிகாவை பார்த்து அசந்து போன ஃபேன்ஸ்.. செம பிக்ஸ்!..
மலையாளத்தில் சிறுமியாக பல படங்களிலும் நடித்தவர் அனிகா சுரேந்திரன். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தில் திரிஷாவின் மகளாகவும், அவர் மரணமடைந்துவிடவே, அவருக்கு பின்னால் அஜித்திடம் வளரும் சிறுமியாகவும் சிறப்பாக நடித்திருந்தார்.
அதிலும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ பாடல் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. அஜித் - அனிகா இடையே அப்பா - மகள் கெமிஸ்ட்ரி நன்றாகவே இருந்தது. அதன்பின் சில படங்களில் நடித்தாலும் சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார் அனிகா.
இந்த படத்தில் அஜித் - நயன்தாராவின் மகளாகவும், அப்பா பாசம் இல்லாமல் ஏங்கும் சிறுமியாகவும் அழகான நடிப்பை கொடுத்து ரசிகர்களிடம் அனுதாபத்தை பெற்றார். இந்த படத்தில் இவருக்கு நிறைய காட்சிகள் இருந்தது. அனைத்திலுமே சிறப்பாக நடித்திருந்தார் அனிகா.
குறிப்பாக படத்தின் இறுதிக்காட்சியில் அஜித் தனது அப்பா என்பது தெரிந்ததும் அவர் காட்டும் சந்தோஷமும், ஆனந்த கண்ணீரும் ரசிகர்களை அழ வைத்தது. அதன்பின் சில படங்களில் நடித்த அனிகா ஒரு கட்டத்தில் கதாநாயகியாகவும் நடிக்க துவங்கினார். அதிலும், ‘ஓ மை டார்லிங்’ எனும் தெலுங்கு படத்தில் லிப்-லாக் காட்சியிலெல்லாம் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அந்த பச்ச மண்ணா இது?.. என ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள். இப்போதெல்லாம், கவர்ச்சி நடிகைகள் போல கொஞ்சம் கிளுகிளுப்பு காட்டி அனிகா புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். ஏனெனில், அப்படி செய்தால்தான் கதாநாயகி வாய்ப்புகள் வரும் என அவர் கணக்கு போடுவதாக தெரிகிறது.
இந்நிலையில், கேரளா ஸ்பெஷல் ஓணம் புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து அனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘அடுத்த நயன்தாரா ரெடி’ என பதிவிட்டு வருகின்றனர்.