கார் கொடுத்தது அவரா இருக்கலாம்… ஆனா ஜெய்லரை விட இந்த படம் தான் அனிருத்துக்கு ஸ்பெஷலாம்...

by Akhilan |
கார் கொடுத்தது அவரா இருக்கலாம்… ஆனா ஜெய்லரை விட இந்த படம் தான் அனிருத்துக்கு ஸ்பெஷலாம்...
X

Anirudh: தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தான் அனிருத். கிட்டத்தட்ட தற்போதைய ஹிட் படங்கள் அனைத்துக்குமே அவர் தான் இசையமைத்து இருக்கிறார். அதிலும் ஜெய்லர் படத்தின் வெற்றி அனிருத்துக்கு மேலும் எனர்ஜி தந்திருக்கிறது.

2012ம் ஆண்டு 3 திரைப்படத்துக்காக அனிருத் இசையமைத்த அவரது முதல் பாடல் "வை திஸ் கொலவெறி டி", உலகம் முழுவதும் வைரலாகி, யூடியூப்பில் 400 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதுவே அனிருத்துக்கு கோலிவுட்டில் தனி இடத்தினை கொடுத்தது.

இதையும் படிங்க: முத இத முடிக்கணும்! லியோ ஆடியோ லாஞ்சில் பக்கா ப்ளான் போட்ட விஜய்… நல்ல ஐடியா தான்!.

அப்படத்தினை அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்துக்கு இசையமைத்தார். இப்படத்திலும் செல்ஃபி புள்ள பாடல் பெரிய ஹிட் கொடுத்தது. அடுத்த வாய்ப்பாக ரஜினிகாந்தின் பேட்ட படத்திற்கு இசையமைத்தார்.

தொடர்ச்சியாக பல மாஸ் ஹிட் நாயகர்களின் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து வருகிறார். லியோ, இந்தியன்2, ஜவான் என அவரின் லிஸ்ட் நீண்டுக்கொண்டே செல்கிறது. அனிருத்தின் சமீபத்திய இரண்டு ஹிட் படங்கள் என்றால் கமலின் விக்ரம், ரஜினியின் ஜெய்லர் திரைப்படம் தான்.

இதையும் படிங்க: ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்க இருக்கும் நடிகர் இவரா? அட செம மேட்சுப்பா!

அதிலும் முதல்முறையாக ஜெய்லர் வெற்றிக்கு ஹீரோ, இயக்குனருக்கு மட்டுமல்லாமல் அனிருத்துக்கும் கலாநிதி மாறன் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பரிசாக கொடுத்தார். விக்ரம் படத்துக்கு லோகேஷ் கனகராஜுக்கு மட்டுமே கார் கொடுத்திருந்தார்.

இந்த கார் கிடைத்திருந்தாலும் அனிருத்துக்கு எப்போதுமே மிகப்பெரிய கிப்ட் என்றால் அது விக்ரம் படம் தானாம். அதற்கு மேல் எனக்கு வேறு எதுவும் வேண்டாம். அந்த படத்தின் வெற்றியே தனக்கு லைப் டைம் செட்டில்மெண்ட் தான் என தனது சகாக்களிடம் பேசி இருக்கிறார்.

Next Story