டாப் கடை விளம்பரங்களுக்கு வாய்ஸ் ஓவர் கொடுக்கிறது இவரா? அனிருத் வீட்டில் குவிந்து கிடக்கும் ரகசியம்

Published on: February 15, 2024
aniruth
---Advertisement---

Aniruth: தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இசையமைப்பாளர் அனிருத். இந்த சிறு வயதிலேயே யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவில் பல சாதனைகளை படைத்திருக்கிறார்.

இவரின் இசையில் வெளிவந்த அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அதுமட்டுமில்லாமல் வெளி நாடுகளில் இசைக் கச்சேரியும் செய்து வெளி நாட்டிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார் அனிருத்.

இதையும் படிங்க: வளர்ப்பு அப்பாவாக மாறிய ராஜ்கிரண்.. கேட்ட ஒரே உதவியால் தூக்கி எறிந்த அஜித்… பாவமுங்க..

இந்த நிலையில் அனிருத்தின் அம்மா மற்றும் சித்தி சமீபத்தில் ஒரு பேட்டியில் பல சுவாரஸ்ய சம்பவங்களை கூறினார்கள். டெலிவிஷனில் முதல் பெண் இயக்குனர்கள் என்றால் அது அனிருத்தின் அம்மாவும் சித்தியும்தானாம்.

சன் டிவிக்காக அர்த்தமுள்ள உறவுகள் என்ற தொலைக்காட்சி தொடரை இயக்கியிருக்கிறார்களாம். அந்த நேரத்தில் தினமும் சீரியல்கள் ஒளிபரப்பாகாதாம். வாரத்திற்கு ஒரு எபிசோடு வீதம்தான் ஒளிப்பரப்புவார்களாம். அந்த வகையில் இவர்கள்தான் முதல் டெலிவிஷன் இயக்குனர்கள் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: உங்களை சேர்த்தது தப்புதான்..கடிந்துக்கொண்ட பிரபல நடிகர்… இனி செய்ய மாட்டேன்.. வாக்கு தந்த ரஜினிகாந்த்

அதோடு கிட்டத்தட்ட 20 வருடங்களாக கோதரிகள் இருவரும் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் என்ற ஒரு கான்சப்ட் ஆரம்பித்து அதன் மூலம் பெரிய பெரிய திருமணங்களை செய்து வைக்கும் ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்களாம். திருமணத்திற்கான அத்தனை வேலைகளையும் இவர்களே பார்த்துக் கொள்வார்களாம்.

ani
ani

இந்த நிலையில் முன்பெல்லாம் டிவியில் ரத்னா ஸ்டோர்ஸ், சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளின் விளம்பரங்கள் குறித்து அடிக்கடி ஒளிபரப்பாகும். அதில் ஒரு பெண் குரலும் சேர்ந்து ஒலிக்கும். கணீர் குரலில் கேட்கவே அற்புதமாக இருக்கும். அந்த வாய்ஸ்க்கு சொந்தக்காரரே அனிருத்தின் சித்திதானாம். இந்த செய்தியை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார்.

இதையும் படிங்க: நன்றி கடனுக்காக சாதாரண மனிதரின் இறுதிச்சடங்கில் உச்சி வெயிலில் கலந்து கொண்ட அஜித்!. காரணம் இதுதான்!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.