Cinema News
தள்ளிவிட்டதுக்கு ஒரு நாள் தண்டனை!.. பொறுமையா பாலய்யாவை பெயிலில் எடுத்த அஞ்சலி!.. கரி பூசிட்டாரே!..
கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி 2 நாட்களுக்கு முன்னதாக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான நடைபெற்றது. விஷ்வக் சென், அஞ்சலி நடித்துள்ள அந்த படம் மே 31-ஆம் தேதி ஆன இன்று வெளியாகிறது. அந்தப் படத்தை புரமோஷன் செய்வதற்காக சிறப்பு விருந்தினராக பாலகிருஷ்ணாவை அழைத்திருந்தனர்.
பாலகிருஷ்ணனும் நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொண்டு அட்டகாசமாக பேசி தனது ரசிகர்களை அந்தப் படத்தை பார்க்கும்படி வலியுறுத்தினார். ஆனால், அதெல்லாம் அந்த படத்துக்கு பப்ளிசிட்டி ஆக அமையவில்லை. அதற்கு பதிலாக நெகட்டிவ் பப்ளிசிட்டி ஆக பாலகிருஷ்ணா அஞ்சலியை பிடித்து தள்ளிவிட்ட காட்சிகள் வைரலாகின.
இதையும் படிங்க: பிக் பாஸ் பிரபலத்தை விரட்டி விட்ட அம்மா!.. இனிமே எந்த தொடர்பும் இல்லை என நோட்டீஸ்!.. என்ன ஆச்சு?..
பாலகிருஷ்ணா ஒரு அசிங்கம் என பாலிவுட் இயக்குனர் ஹன்சல் மேத்தா எக்ஸ் தளத்தில் அந்த காட்சியை பார்த்து பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலகிருஷ்ணனை பகைத்துக் கொண்டால் நிச்சயம் டோலிவுட்டில் தங்கள் படம் ஓடாது என தெரிந்து கொண்ட படத்தின் ஹீரோ விஷ்வக் சென் மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் எல்லாம் நேத்தே அடித்து பிடித்து பாலகிருஷ்ணாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அது ஒரு விளையாட்டாக நடந்த சம்பவம். நடிகை அஞ்சலியே அது பெரிதாக பொருட்படுத்தி கொள்ளாமல் சிரித்தார். ஆனால் சோசியல் மீடியாவில் தேவையில்லாமல் சிலர் அதை ஊதிப் பெரிது ஆக்குகின்றனர் என விஷ்வக் சென் கூறினார்.
இதையும் படிங்க: இன்னும் பெட்டரா வேணும்!.. பாக்கியராஜ் சொன்னதில் கடுப்பாகி கத்திய இளையராஜா.. அந்த சூப்பர் ஹிட் பாட்டா!..
ஆனால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அஞ்சலி நேற்று முழுவதும் பாலகிருஷ்ணாவை சமூக வலைத்தளங்களில் எந்த அளவுக்கு கழுவி ஊற்ற முடியுமோ கழுவி ஊற்றும் என பொறுத்துக் கொண்டிருந்தார் போல தெரிகிறது. இன்று படம் வெளியாக உள்ள நிலையில் திடீரென நள்ளிரவில் ஒரு பதிவை எக்ஸ் தளத்தில் போட்டுள்ளார்.
அதில், பாலகிருஷ்ணாவுக்கு நன்றி தன்னுடைய பல விழாவில் கலந்து கொண்டு தங்கள் படக்குழுவினருக்கு உற்சாகம் அளித்த பாலகிருஷ்ணாவுக்கு நன்றி. நானும் பாலகிருஷ்ணா பல வருடங்களாக நண்பர்களாக உள்ளோம். இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்துக் கொண்டு நட்பைப் பேணி வருகிறோம். அவருடன் மேடையை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வேணாம்னு சொன்ன பாட்டுக்கு தேசிய விருது..! சாதித்துக் காட்டிய ஏவிஎம் படம்…