வடிவேலு, சுந்தர் சி. காம்போவுல ஏன் இந்த 14 வருஷ இடைவெளி… பின்னணியில இவ்ளோ விஷயம் இருக்கா?

by sankaran v |   ( Updated:2025-04-22 11:49:43  )
vadivelu sundar c
X

vadivelu sundar c

தமிழ்த்திரை உலகில் வைகைப்புயல்னு சொன்னாலே வடிவேலு தான் டக்குன்னு நினைவுக்கு வரும். இடையில அவரது வாயால பெரிய கேப் விழுந்ததாக சொல்றாங்க. இதுகுறித்து வலைப்பேச்சு அந்தனன் என்ன சொல்றாருன்னு பாருங்க.

வடிவேலு, சுந்தர்.சி.யின் காம்போ 14 ஆண்டுகள் கழித்து இப்போ மீண்டும் உருவாகி உள்ளது. இந்தக் காம்பினேஷன் அவ்ளோ பிரமாதமா இருக்கு. வடிவேலு திரும்ப வந்துட்டாரு. ஏன் இந்த ஆளு போனாருங்கற கோபம், வருத்தம் மக்களுக்கு இருக்கு. அவரு வந்து நின்னாலே போதும். சாதாரண டயலாக்தான். சாதாரண பார்வை. அவரே மாதிரி ஒரு ஆளு பொறந்து வர முடியாது.

ஆனா அவருக்கே தனக்கு இணையானவன் எவரும் கிடையாதுங்கற திமிரு வரும்போது தான் சரிவு. இயற்கை வந்து பாடம் கொடுக்கும். அதுதான் வடிவேலுவுக்குக் கிடைச்சிருக்கு. இந்தப் படம் எல்லாம் நினைச்ச நேரத்துல எடுக்கப்பட்டது. டயலாக் தானேன்னு போக மாட்டாரு. அதை எங்கெல்லாம் சரி பண்ண முடியுமோ அங்கே வரைக்கும் பண்ணுவாரு. டப்பிங் வரைக்கும் சரி பண்ணுவாரு.

வடிவேலுவோடு பயணித்த சக நடிகர்களே அவரைக் குறை சொல்றாங்க. ஒரு அளவுக்கு மேல சம்பாதிக்கிறாரு. உங்க கூட உள்ளவன்கிட்ட ஷேர் பண்ணிக்கலாம். என்னை நம்பி 10 பேரு இருக்காங்க. அவங்களை நிம்மதியா வாழ வச்சா போதும். நாம நல்லாருப்போம்.

அப்படி யாராவது இருக்காங்களா? வடிவேலுவிடம் இருந்து வந்தவங்க யாராவது நிம்மதியா இருக்குறதா சொல்லிருக்காங்களா? அந்த விஷயத்துல பின்னோக்கித்தான் இருக்காரு. அது இருந்துருந்தா இன்னும் வடிவேலுவோட புகழைப் பாடிக்கிட்டேதான் இருப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடைசியாக சுந்தர்.சி உடன் வடிவேலு 2010ல் நகரம் மறுபக்கம் என்ற படத்தில் நடித்து அசத்தினார். அந்தப் படம் முழுக்க முழுக்க காமெடிதான். அதன் பிறகு இப்போது கேங்கர்ஸ்ல தான் மீண்டும் இணைகிறார். படம் வரும் 24ம் தேதி வெளியாகிறது.

Next Story