Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் டிவியில் இருந்து மிகப்பெரிய உச்சத்தை தொட்டு இருக்கும் பிரபலம் என்றால் அது சிவகார்த்திகேயன் மட்டும் தான். சர்ச்சையிலேயே சிக்காமல் வலம் வந்தவர். ஒரே பிரச்னையால் தற்போது எல்லாராலும் ட்ரோல் செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
மெரீனா படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்து இருந்தார். முதல் படமே அவருக்கு நல்ல ரீச்சை கொடுக்க அடுத்து மனம் கொத்தி பறவையும் சுமார் வெற்றியை தான் பெற்றது. அடுத்து தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் திரைப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
இதையும் படிங்க:உங்களுக்காக அதை மாத்த முடியாது!.. எம்.ஜி.ஆரையே எதிர்த்து பேசிய வாலி!.. அதன்பின் நடந்தது இதுதான்!..
அப்படத்தினை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே என சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தது. சினிமாவில் உயரத்திற்கு மிக முக்கிய காரணம் அவரின் பெயர் எந்த இடத்திலும் டேமேஜ் ஆகவே இல்லை. அதனை சரியாக கவனித்து வந்தார் சிவகார்த்திகேயன். இதில் 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திரைப்படம் அயலான்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய கடன் சுமை இருப்பதால் இந்த பொங்கலுக்கும் வெளியாகுமா என்பதே சந்தேகமான விஷயமாக மாறி இருக்கிறது. இந்த சர்ச்சை ஒருபுறம் இருக்க, பாடகி சின்மயி வைரமுத்து குறித்து ஒரு புகாரை பொதுவெளியில் வைத்தார். அது பெரிய சர்ச்சையை கிளப்பியது.
இதையும் படிங்க: இப்பவே ஆப்பு வைக்க ரெடியாகிட்டாங்க! தளபதி 68 ஆல் படாதபாடு படப் போகும் விஜய்
இதனை தொடர்ந்து டி.இமான் பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக கூறியதை அடுத்து இன்று நடக்க இருக்கும் அயலான் ஆடியோ வெளியீட்டில் தான் சிவகார்த்திகேயன் பேச இருக்கிறார். அதனால் அவர் தன் மீது இருக்கும் புகார் குறித்து மறைமுகமாக எதுவும் சொல்லுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.