Cinema News
பேத்தியை பத்தி அவங்க அப்பா, அம்மாகிட்ட கேளுங்க… ஏ.ஆர்.ரஹானா பதிலால் அதிர்ந்த ரசிகர்கள்…
AR Rahana: நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் அம்மா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹானா. இவர் தன்னுடைய மருமகள் சைந்தவி, பேத்தி குறித்து பேசி இருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் சகோதரிதான் ஏ ஆர் ரஹானா. இவரின் மகன் ஜிவி பிரகாஷ். இவர் தன்னுடைய பள்ளிக்கால காதலி பாடகி சாய்ந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுமுகமாக சென்று கொண்டிருந்த உறவை சமீபத்தில் முறித்துக் கொள்வதாக இருவரும் அறிவித்தனர்.
இதையும் படிங்க: வந்தா எல்லாரும் ஒன்னாவே வந்துடுவீங்களா… கோட், கூலி, குட் பேட் அக்லி…என்ன ஒரே மாதிரியா இருக்கு…
இது பலரிடத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தங்களுக்கு மன நிம்மதி வேண்டி அதற்கான பிரேக்கை கொடுக்குமாறு இருவரும் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் விவாகரத்தில் பல வியூகங்கள் பேசப்படுகிறது. ஜிவி பிரகாஷ் நடிகர் ஆன பிறகு சரியில்லை என்றும், சைந்தவி தன்னுடைய அம்மாவுடன் இணைந்து குடும்பத்தை கவனிக்காமல் இருக்கிறார் எனவும் பல பேச்சுக்கள் வெளியாகி வருகிறது.
இதில் இன்னொரு அதிர்ச்சிகரமான ஒரு வீடியோவும் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஏ ஆர் ரஹானா தன்னுடைய பேட்டி ஒன்றை சைந்தவி குறித்து பேசி இருக்கிறார். அதில், எள்ளுவய பூக்கலையே பாடல் சைந்தவி பாடியது குறித்து கேட்ட போது அவங்களோட ஸ்டைலே இல்லை. ரெக்கார்டிங்கிலும் அவங்களோட பாடி இருக்கேன். மேடையிலும் அவர்களுடன் பாடி இருக்கிறேன். இது சைந்தவியின் ஸ்டைல் இல்லை.
இதையும் படிங்க: ஆரம்பிச்சிட்டாங்க அலப்பறைய! ‘குக் வித் கோமாளி’யை கூண்டோடு காலிபண்ண இறங்கிய வடிவேலு