Categories: Cinema News latest news

ஹீரோக்கள் என்னை மதிக்கிறதே இல்லை!.. ஹீரோயின்கள் தான் சான்ஸ் கொடுக்கிறாங்க.. கோபி நயினார் வருத்தம்!..

கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களை மட்டுமின்றி சினிமா பிரபலங்களையும் அரசியல் தலைவர்களையும் உற்றுநோக்கி பார்க்க வைத்துள்ளது.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படத்தின் கதை தன்னுடைய கதை என போராடிய கோபி நயினாருக்கு சரியான நீதி கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் யாரும் கத்தி படத்தின் கதையை இவர்தான் எழுதியிருப்பார் என்று கூட நம்பவில்லை.

Also Read

இதையும் படிங்க: குஷி ஜோதிகா இடுப்பை விட இது சூப்பரா இருக்கே!.. பிகில் நடிகை எப்போ இப்படி காட்ட ஆரம்பிச்சாரு!..

2017 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படத்தை இவர் இயக்கிய பின்னர் தான் ஏ.ஆர். முருகதாஸ் சினிமா வாழ்க்கை சரிவை சந்திக்க ஆரம்பித்தது என்று கூட சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர். நயன்தாராவை வைத்து அறம் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நயினார் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழித்து ஆண்ட்ரியாவை வைத்து மனுஷி படத்தை இயக்கியுள்ளார்.

அறம் படத்தின் வெற்றிக்குப் பிறகு கூட எந்த ஒரு பெரிய ஹீரோவும் உங்களிடம் கதை கேட்கவில்லையா என்கிற கேள்விக்கு பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் தன்னை கண்டுக்கவே இல்லை என்றும் ஹீரோயின்கள் தான் மதித்து வாய்ப்பு கொடுக்கின்றனர் என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு மட்டும் தான் மோசம்!.. காஷ்மீர்ல கூட இந்த கொடுமை இல்லை.. விஷால் பகிரங்க குற்றச்சாட்டு!..

சினிமாவில் நல்ல கதைகளை வைத்துக்கொண்டு நல்ல படங்களை இயக்குபவர்கள் ஹீரோக்கள் அழைத்து கதை கேட்பதில்லை. அதற்கு பதிலாக யாரை வளர்த்து விட வேண்டும் என்கிற நோக்கத்தில் மட்டுமே இங்கே சினிமா இயங்கிக் கொண்டிருப்பதாக பெரும் குற்றச்சாட்டையும் கோபி நயினார் வைத்துள்ளார்.

அறம் கதையை கேட்டதுமே ஒரு குழந்தையை மீட்க இங்கே எந்தவொரு தொழில்நுட்பமும் இல்லை என்பதை தெரிந்ததும் நயன்தாராம்மா ஓகே சொல்லிவிட்டார். அதே போலத்தான் ஆண்ட்ரியாவும் கதையின் மையக் கருவை புரிந்துக் கொண்ட நிலையில், படத்தில் நடிக்க சம்மதித்து விட்டார் என பேசியுள்ளார்.

இதையும் படிங்க: கிச்சானாலே இளிச்சவாயன் தானே!.. யுவன் சங்கர் ராஜா விஜய்க்கு இப்படியொரு துரோகத்தை செய்யலாமா?..

 

Published by
Saranya M