முதல் பிளாக்பஸ்டர்!.. தமன்னா பண்ண புண்ணியத்தால் தப்பித்த தமிழ் சினிமா!.. 7 நாள் வசூல் எவ்வளவு?
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தை கடந்த ஆண்டு காவாலா டான்ஸ் மூலமாக தமன்னா எப்படி காப்பாற்றினாரோ அதே போல சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 படத்தையும் தமன்னா தனது நடிப்பால் காப்பாற்றியுள்ளார்.
அரண்மனை 4 படத்தை மட்டுமின்றி தமிழ் சினிமாவுக்கும் இந்த ஆண்டு முதல் வெற்றியை தமன்னா தான் தேடிக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் என ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நான் நல்லா நடிப்பேன்.. யாராவது ஒரு சான்ஸ் கொடுங்க!.. விஜய் பட நடிகைக்கா இந்த நிலைமை?..
அச்சச்சோ பாடலில் தமன்னா காட்டிய தாராள கவர்ச்சியை பார்த்து விட்டு சென்சார் பிளர் செய்து விட்டது. ஆனால், அந்த பாடல் யூடியூபில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. தமன்னா மற்றும் ராஷி கன்னா இருவரும் நடனமாடும் போது எடிட்டர் பார்த்த டிரான்சிஷனை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ், சேஷு காமெடி காட்சிகள் சுமாராக இருந்தாலும் முதல் பாதியில் வரும் ஹாரர் காட்சிகள் படத்தை தூக்கி நிறுத்த இந்த ஆண்டு கோலிவுட்டுக்கு கிடைத்த முதல் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அரண்மனை 4 மாறியுள்ளது.
இதையும் படிங்க: தூள் கிளப்பிய கவின்.. வேறலெவல் நடிப்பு.. ஆனால், அந்த பிரச்சனை இருக்கு ?..’ஸ்டார்’ விமர்சனம் இதோ!
ஒரு வாரத்தில் அரண்மனை 4 திரைப்படம் உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டி வெற்றிநடை போட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 40 கோடி ரூபாய் வசூலை அரண்மனை 4 படம் அள்ளியிருக்கிறது. இந்த வாரமும் தியேட்டர்களில் ரசிகர்கள் கவினின் ஸ்டார் மற்றும் அரண்மனை 4 படத்தை பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாலியாகவும் த்ரில்லாகவும் படம் பார்க்க விரும்பும் ரசிகர்கள் நிச்சயம் அரண்மனை நான்கு படத்தை தான் பார்ப்பார்கள். இன்னும் ஒரு வாரம் இதே வேகத்தில் படம் ஓடினால் 100 கோடி ரூபாய் வசூலை தொட வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: விஜயகாந்த் வில்லனாகக் கெத்து காட்டிய படங்கள்… டாங்லீக்கே முன்னோடியாக இருந்த கேப்டன்!