ஒருவழியா ஆரம்பிச்சிட்டிங்களே… கோட் படத்தினை அவெஞ்சர் லெவலுக்கு ஸ்கெட்ச் போடும் வெங்கட் பிரபு!
GoatMovie: விஜய் நடிப்பில் தற்போது உருவாக்கி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் அடுத்த கட்ட வேலைகளை இயக்குனர் வெங்கட் பிரபு தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் புகைப்படங்களையும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
கல்பத்தி எஸ் தகரம் சார்பில் உருவாகி வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார். பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மைக் மோகன், எஸ் ஜே சூர்யா, சினேகா, லைலா உள்ள பிரபலங்கள் முக்கிய இடத்தில் நடிப்பதாக தகவல் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: விஷால் இழுத்துட்டு ஓடுன பொண்ணு கால் கேர்ள்… ஆண்ட்ரியாவிடம் இருக்கும் 200 வைர நெக்லஸ்… பகீர் கிளப்பும் சுசித்ரா…
இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் இறுதிகட்டத்தினை நெருங்கி இருப்பதாக கூறப்பட்டது. விஜய் தன்னுடைய ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருக்கும் போதே டப்பிங் பணிகளை பாதி முடித்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. இப்படத்தின் அடுத்த சிங்கிளை ஜூன் மாதத்தில் வெளியிடப் படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஏற்கனவே இப்படம் சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதற்காக விஜய், வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா உள்ளிட்டோர் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று வந்த தகவல்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. இப்படத்தில் விஜய்யின் இளமைப்பருவம் டிஏஜிங் முறையில் கொண்டுவரப்பட இருக்கிறது. மேலும் விஜயகாந்தின் உருவமும் ஏஐ உதவியுடன் பயன்படுத்த இருப்பதாக தெரிகிறது.
இதையும் படிங்க:ஓவராக உண்மையை உடைக்கும் சுசித்ரா… வாயை திறக்காமல் இருக்கும் பிரபலங்கள்… ரகசியம் சொன்ன பிரபலம்!