ரஜினி, கமல் இணைந்து நடிக்கப் போறாங்களா? அந்த தயாரிப்புன்னா சாத்தியமாம்..!

by sankaran v |   ( Updated:2024-06-30 11:29:59  )
Kamal, Rajni
X

Kamal, Rajni

ரஜினி, கமல் கடைசியாக இணைந்து நடித்த படம் நினைத்தாலே இனிக்கும். அதன்பிறகு இருவரும் தனித்தனியாக நடிப்பது என்று முடிவு செய்து நடித்தார்கள். அதற்கு கமல் தான் ரஜினிக்கு ஆலோசனையை சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் இருவரும் தனித்தனியாக நடித்தால் நம் எதிர்காலத்துக்கு நல்லது என்றாராம் கமல்.

அதன்படி ரஜினியும், கமலும் தனித்தனியாக நடிக்க ஆரம்பித்தனர்.
இருவரும் திரைத்துறையில் தான் தங்கள் படங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு நடிப்பார்களே தவிர நிஜத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒருவருக்கொருவர் படங்கள் வரும்போது அதைப் பார்த்துப் பாராட்டு தெரிவிப்பார்கள்.

இதையும் படிங்க... ஃபேன் மேட் வேண்டாம்!. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்ப வரும்?!. விடாமுயற்சியை பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்…

சமீபத்தில் கூட ரஜினி கமல் நடித்த கல்கி படத்தைப் பார்த்து பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கமல் ஒரு விஷயத்தைத் தெரிவித்துள்ளார். ஒரு வட இந்தியப் பத்திரிகைக்குப் பேட்டி கொடுக்கும் போது கமல் இப்படி சொன்னாராம்.

40 வருடத்துக்கு முன்னாடி நானும், ரஜினியும் பைக்குல சுத்துவோம். எங்களுக்கு தொழில் போட்டியே தவிர வேறு எதுவும் கிடையாது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்தால் அந்தப் படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் தான் தயாரிக்க வாய்ப்பு இருக்கு என்று தெரிவித்துள்ளார்.

Kamal Rajni

Kamal Rajni

எங்களுக்கு சம்பளம் முக்கியமல்ல. நல்ல கதை கிடைத்தால் போதும். நடித்து படத்தை ரிலீஸாக்கி விடலாம் என்றும் கூறினாராம். ரஜினியும், கமலும் உலகப்புகழ் பெற்றவர்கள் என்பதால் படம் வெளியானால் அதற்கு நல்ல மார்க்கெட் வேல்யு கிடைக்கும் என்பது உறுதி.

அதே போல இயக்குனர் அட்லியும் சல்மான்கான், கமல், ரஜினி மூவரையும் வைத்து நான் இந்தியாவையே மிரட்டும் அளவில் படம் எடுக்கணும். அதற்கான கதையைத் தயாரிக்கப் போறேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் நடிக்கும் மூவரும் உலகப்புகழ் பெற்றவர்கள் என்பதால் இந்தப் படம் மட்டும் வெளியானால் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் ஐயமில்லை.

Next Story