Connect with us
vijay parthiban

Cinema News

விஜயும், பார்த்திபனும்தான் இந்த நிலைக்கு காரணமா? புலம்பும் தயாரிப்பாளர்…!

கமலை வைத்து வேட்டையாடு விளையாடு என்ற சூப்பர்ஹிட் படத்தைத் தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். இப்போது அதன் 2ம் பாகத்திற்காக கமலிடம் கேட்கிறார். ஆனால் அவரது கமிட்மெண்டால் அந்த புராஜெக்ட் இழுத்துக் கொண்டே போகிறது. அதற்கான மாணிக்கம் நாராயணன் கமலையும் விட்டுக்கொடுக்காமல் தான் பேசுகிறார்.

அவர் கூப்பிடுவாருன்னு எதிர்பார்க்குறேன். நானா போய் நிற்க மாட்டேன். கௌதம் வாசுதேவ் மேனனும் ரெடியாகத் தான் இருக்கிறார் என்றும் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். அதே போல அவர் விஜயை வைத்து 1996ல் தயாரித்த மாண்புமிகு மாணவன் படம் பிளாப் ஆனது. அதற்கு என்ன காரணம் சொல்கிறார் என்று பாருங்கள்.

Also read: கமலை மரியாதை இல்லாமல் பேசிய ரசிகை… உடனடியாக அஜித் செய்த சம்பவம்

சந்திரசேகர் டைரக்ட் பண்ணினா சேஃப்னு நினைச்சேன். கரெக்டா இத்தனை நாள்தான்னு சொன்னா முடிச்சிக் கொடுத்துருவாரு. சாகடிக்க மாட்டாரு. அப்படித்தான்  கேஎஸ்.ரவிகுமார். கொஞ்சபேரு தான் இருக்காங்க. மத்த எல்லாருமே குழப்பத்துல தான் இருப்பாங்க. என்ன ஏதுன்னு கேட்க மாட்டாங்க. ஒரே ஒரு ஷாட்டுன்னு சொல்லிட்டு 3 நாளா எடுப்பாங்க.

மாண்புமிகு மாணவன் படத்தில பிரச்சனை எதுவும் இல்லை. அந்தப் படத்துக்கு சந்திரசேகர் டைரக்ட் பண்ணது தவறு. வேற டைரக்டரை வச்சிப் பண்ணிருக்கலாம். தங்கராஜ் தான் விஜய், விஜயகாந்தை எல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர் நடிகர், தயாரிப்பாளர். சுந்தரா டிராவல்ஸ் தயாரிப்பாளரும் அவர் தான்.

அதனால அவரை பைபாஸ் பண்ணி சந்திரசேகர்கிட்ட பேசுனது அவருக்கு இன்னைக்கு வர வருத்தம் உண்டு. அது நான் பண்ணது தவறு. அது தவிர சந்திரசேகரையும் என்கரேஜ் பண்ணிருக்கக்கூடாது. விஜயையோ சந்திரசேகரையோ குறை சொல்லக்கூடாது. தீதும் நன்றும் பிறர் தர வாரா. நான் பண்ணினது எல்லாம் நான் தான் சந்திக்கணும்.

manickam narayanan

manickam narayanan

அப்புறம் எப்படி நஷ்டம்னு அடுத்தவனைக் குறை சொல்ல முடியும்? பார்த்திபனை வச்சி படம் எடுத்தது என்னோட தவறு தான. தாணு எச்சரித்தார். இப்படி 100 பேர் சொன்னாங்க. மகிழ்திருமேனியே ஐயோ அவன்கிட்ட மாட்டிக்கிட்டீங்களேன்னாரு. இது வந்து அனுபவத்துல சொல்றது தான். இவங்க இரண்டு பேரும் தான் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டாங்க.

Also read: சீனாவிலும் கொடி நாட்டிய மகாராஜா!.. சொல்லியிருக்கிறது யாருன்னு பாருங்க!..

14 வருஷம் ராமன் காட்டுக்குப் போனது மாதிரி மாட்டிக்கிட்டு இருக்கேன். அதுல இருந்து வெளியே வர ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன். வந்துருவேன். நான் செய்த தவறுகள் வந்து என்னைப் படுகுழியில தள்ளிடுச்சு. அதுல இருந்து வெளியே வரணும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

2011ல் பார்த்திபன் நடிப்பில் வித்தகன் படத்தை மாணிக்கம் நாராயணன் தயாரித்தார். அதுவும் பிளாப் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top