Categories: Cinema News Jagan latest news

நீங்க என்ன பெரிய புலவரா? வாலியிடம் கடுப்பான நாகேஷ்.. அப்படி என்ன பிரச்சனை தெரியுமா?

கவிஞர் வாலி 15,000த்திற்கும் மேற்பட்ட சினிமா பாடல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி சத்யா, பார்த்தேலே பரவசம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட சில படங்களிலும் அவர் நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் கவிஞர் வாலி, ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது, நடிகர் நாகேஷை பார்த்துள்ளார்.

கவிஞர் வாலியின் நண்பர் ஒருவர், இவர் தான் குண்டுராவ், ரெயில்வேயில் வேலை பார்த்தவர், இந்த படத்தில் நடிக்கவுள்ளார் என்று அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதன் பிறகு வாலி அவரிடம் பேச்சு கொடுத்த போது, நடிகர் நாகேஷ் தான் ரெயில்வே வேலையை விட்டுவிட்டு, இந்த படத்தில் நடிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க- அடுத்தவங்க பட்டத்துக்கே ஏன் ஆசைப்படுறீங்க? அதுக்கு ஒரு நல்ல மனசு வேணும் – விஜயை பிச்சி உதறும் பிரபலம்

இதற்கு முன்னர் நான் சில நாடகங்களில் நடித்துள்ளேன். அதை பார்த்த இயக்குநர், இந்த படத்தில் ஒரு சிறிய வேடம் தருகிறேன் என அழைத்தார். அதனால் நான் ரெயில்வே வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். ரெயில்வேயில் வேலை கிடைப்பதே பெரிய விஷயம். அதை ஏன் விட்டீர்கள்.

நீங்கள் பார்க்க நடிகர் போல இல்லை. மிகவும், ஒள்ளியாக, முகத்தில் அம்மை தளும்போடு இருக்கிறீர்கள். நீங்கள் சினிமாவுக்கு ஆசை பட்டிருக்க கூடாது. உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்துருக்கிறீர்களா? எந்த தைரியத்தில் வேலையை விட்டுவிட்டு நடிக்க வந்தீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு அவர் நீங்கள் என்ன பெரிய புலவரா? நீங்கள் எந்த தைரியத்தில் பாட்டு எழுத வந்தீர்கள் என்று பதிலுக்கு என்னிடம் கேட்டார். அதன் பிறகு நாங்கள் நன்றாக நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம் என்று கவிஞர் வாலியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் நாகேஷ் ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் ஹீரோ, குணசித்திர வேடங்களில் நடித்தார். அந்த படங்கள் சரியாக ஓடவில்லை. அடுத்து நகைச்சுவை வேடத்தில் நடிக்க தொடங்கினார். அந்த படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சினிமாவில் கொடி கட்டி பறந்தார்.

இதையும் படிங்க- ‘முன்பே வா’ பாடல் உருவாக இத்தனை பஞ்சாயத்தா? வாலிக்கும் இயக்குநருக்கும் இடையே முற்றிய வாக்குவாதம்..

Published by
prabhanjani