நீங்க தான் அடுத்த தளபதியா? கேள்விக்கு அல்டிமேட் ரியாக்‌ஷன் கொடுத்த கவின்…

by Akhilan |
நீங்க தான் அடுத்த தளபதியா? கேள்விக்கு அல்டிமேட் ரியாக்‌ஷன் கொடுத்த கவின்…
X

Kavin: தமிழ்சினிமாவில் தளபதி விஜய் வெளியேற இருக்கும் நிலையில் அவர் இடத்துக்கு போட்டா போட்டி நிலவி வருகிறது. இந்த பட்டியலில் இருக்கும் கவினிடமே இந்த கேள்வியை தற்போது செய்தியாளர்கள் முன் வைத்து இருக்கின்றனர்.

கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்து தளபதி 69 திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கடைசி படத்திற்கு சம்பளமாக மட்டுமே 250 கோடி ரூபாய் வாங்கி இருக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: போனை எடுத்தா ஹலோ சொல்றது தானே முறை… என்னங்க சுந்தர்.சி இப்படியா பேசுவாரு?

தற்போதைய தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திரமாக இருக்கும் விஜய் விரைவில் நடிப்பிலிருந்து விலக இருக்கிறார். சில மாதங்கள் முன்னர் தன்னுடைய கட்சியை அறிவித்து பொறுப்பேற்றுக் கொண்ட படங்களை முடித்துவிட்டு மொத்தமாக அரசியல் பணியில் ஈடுபடுவேன் எனவும் அறிவித்திருந்தார்.

பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருக்கும் விஜய் தமிழ் சினிமாவை விட்டு விலகுவது தயாரிப்பாளர்களுக்கு பெரிய நஷ்டத்தை தான் தரும். அவர் சினிமாவை தொடர வேண்டும் என பலர் பேசி வருகின்றனர். இருந்தும் விஜய் சினிமாவை விட்டு விலகினால் அவர் இடத்துக்கு எந்த நடிகர் சரியாக இருப்பார் என்ற விவாதங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இதையும் படிங்க: அட்டகாசமா?.. ஆளவிடுங்கடா சாமி ரகமா?.. அரண்மனை 4 நம்பி பார்க்க போலாமா?.. விமர்சனம் இதோ!..'

இதில் நடிகர் சிவகார்த்திகேயன், சமீபத்திய காலமாக நல்ல படங்களை கொடுத்து வரும் நடிகர் கவின் என பலர் இந்த லிஸ்டில் உள்ளனர். அந்த வகையில் நடிகர் கவின் தன்னுடைய ஸ்டார் பட புரோமோஷனுக்காக செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடமே இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது.

நீங்கள் தான் அடுத்த தளபதி விஜய் என பேசிக்கொள்கிறார்கள் எனக் கேட்டபோது, ஐயா அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. இது 12 வருஷம் போராட்டம். இப்படி எதையாவது சொல்லி என்னை முடித்து விட்றாதீங்க என கலகலப்பாக தெரிவித்து இருந்தார். தற்போது அவர் பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Next Story