Categories: latest news

நீங்க தான் அடுத்த தளபதியா? கேள்விக்கு அல்டிமேட் ரியாக்‌ஷன் கொடுத்த கவின்…

Kavin: தமிழ்சினிமாவில் தளபதி விஜய் வெளியேற இருக்கும் நிலையில் அவர் இடத்துக்கு போட்டா போட்டி நிலவி வருகிறது. இந்த பட்டியலில் இருக்கும் கவினிடமே இந்த கேள்வியை தற்போது செய்தியாளர்கள் முன் வைத்து இருக்கின்றனர்.

கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்து தளபதி 69 திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கடைசி படத்திற்கு சம்பளமாக மட்டுமே 250 கோடி ரூபாய் வாங்கி இருக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: போனை எடுத்தா ஹலோ சொல்றது தானே முறை… என்னங்க சுந்தர்.சி இப்படியா பேசுவாரு?

தற்போதைய தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திரமாக இருக்கும் விஜய் விரைவில் நடிப்பிலிருந்து விலக இருக்கிறார். சில மாதங்கள் முன்னர் தன்னுடைய கட்சியை அறிவித்து பொறுப்பேற்றுக் கொண்ட படங்களை முடித்துவிட்டு மொத்தமாக அரசியல் பணியில் ஈடுபடுவேன் எனவும் அறிவித்திருந்தார்.

பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருக்கும் விஜய் தமிழ் சினிமாவை விட்டு விலகுவது தயாரிப்பாளர்களுக்கு பெரிய நஷ்டத்தை தான் தரும். அவர் சினிமாவை தொடர வேண்டும் என பலர் பேசி வருகின்றனர். இருந்தும் விஜய் சினிமாவை விட்டு விலகினால் அவர் இடத்துக்கு எந்த நடிகர் சரியாக இருப்பார் என்ற விவாதங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இதையும் படிங்க: அட்டகாசமா?.. ஆளவிடுங்கடா சாமி ரகமா?.. அரண்மனை 4 நம்பி பார்க்க போலாமா?.. விமர்சனம் இதோ!..`

இதில் நடிகர் சிவகார்த்திகேயன், சமீபத்திய காலமாக நல்ல படங்களை கொடுத்து வரும் நடிகர் கவின் என பலர்  இந்த லிஸ்டில் உள்ளனர். அந்த வகையில் நடிகர் கவின் தன்னுடைய ஸ்டார் பட புரோமோஷனுக்காக செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடமே இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது.

நீங்கள் தான் அடுத்த தளபதி விஜய் என பேசிக்கொள்கிறார்கள் எனக் கேட்டபோது, ஐயா அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. இது 12 வருஷம் போராட்டம். இப்படி எதையாவது சொல்லி என்னை முடித்து விட்றாதீங்க என கலகலப்பாக தெரிவித்து இருந்தார். தற்போது அவர் பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Akhilan

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

32 minutes ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

1 hour ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

2 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

3 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

9 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

10 hours ago