Categories: latest news

பொங்கலுக்கு வரும்னு பார்த்தா!.. இப்போதான் பாலா டீசருக்கே தேதி குறிச்சிருக்காரு.. வணங்கான் வருது!

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சூர்யா தயாரித்து நடிக்கிறேன் என 2டி நிறுவனம் சார்பில் வணங்கான் திரைப்படம் தொடங்கப்பட்டது. கன்யாகுமரியில் பல மாதங்கள் சூட்டிங் அடிக்கடி சண்டைகளுக்கு நடுவே எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லி சொல்லியே நடத்தினர்.

கடைசியில் இதற்கு மேல் முழு பூசணியை சோத்துல மறைக்க முடியாது என நினைத்த சூர்யா இந்த படத்தில் இருந்து தானும் தனது நிறுவனமும் கூடவே ஹீரோயின் கீர்த்தி ஷெட்டியும் ஒதுங்குவதாக அறிவித்து விட்டார்.

இதையும் படிங்க: எப்படிப்பா அந்த பழைய யுவனை மறுபடியும் தேடி பிடிச்சிங்க!.. நிவினை தொடர்ந்து கவினுக்கும் சூப்பர் சாங்!

அதன் பின்னர் கடைசியா வந்தவர் தான் அருண் விஜய். பாலா இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் அவருடன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் பிரியா பவான் சங்கரும் தான் வணங்கான் படத்தில் நடித்துள்ளனர்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கே வணங்கான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசியில் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. உடனடியாக கிடப்பில் கிடந்த மிஷன் பார்ட் 1 படத்தை அருண் விஜய் ரிலீஸ் செய்தார். படம் நல்லா இருந்தும் பார்க்க கூட்டம் வராத நிலையில், படம் வந்த சுவடே தெரியாமல் போய் விட்டது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் சீரியஸா பேசும் போது மட்டும் ஏன் சிரிப்பு வருது!.. ’அமரன்’ அமர்க்களப்படுத்துமா?

இப்படிப்பட்ட சூழலில் பாலாவின் வணங்கான் படம் அருண் விஜய்க்கு மிகப்பெரிய கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பிப்ரவரி 19ம் தேதி படத்தின் டீசர் வெளியாகிறது. மார்ச் மாதம் படத்தை வெளியிடும் முடிவில் பாலா இருப்பதாக கூறுகின்றனர்.

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

33 minutes ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

1 hour ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

2 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

3 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

9 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

10 hours ago