சும்மா அள்ளுது!.. புது மனைவியுடன் அசத்தல் போட்டோஷூட்!.. அசோக் செல்வனின் நியூ கிளிக்ஸ்!.

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் அசோக் செல்வன். பல படங்களில் நடித்திருந்தாலும் தெகிடி, ஓ மை கடவுளே ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். சரத்குமாருடன் இணைந்து இவர் நடித்து வெளியான போர்த்தொழில் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்கு பின் பல படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வருகிறது. இந்நிலையில்தான், சமீபத்தில் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் அசோக் செல்வனுக்கும் திருமணம் நடந்தது. கீர்த்தி நடிகர் அருண் பாண்டியனின் மகள் ஆவார். தும்பா, அன்பிற்கினியாள், கொஞ்சம் பேசினால் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: கோடி கோடியா கல்லா கட்றாங்கப்பா!.. ரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்த தனுஷ் 50!..
கீர்த்திக்கும், அசோக் செல்வனுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அதேநேரம், இவர்கள் பற்றிய கிசுகிசுவோ, செய்தியோ எதுவும் வெளியாகவே இல்லை. அவ்வளவு ரகசியமாக அவர்களின் காதல் இருந்தது. இவர்களின் திருமணம் திருநெல்வேலியில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
இது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், தற்போது இருவரையும் வைத்து ஒரு புதிய போட்டோஷூட் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களையும் இருவருமே தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: போதையில் மிஷ்கினிடம் சிக்கிய மணிரத்னம்… பார்ட்டின்னாலே தெறித்து ஓடும் பெரிய இயக்குனர்கள்…