இவ்வளவு தானா.?! 2 வாரத்தில் ஓடிவிடுகிறார்கள்.! வருத்தப்பட்ட நயன்தாரா காதலர்.!

by Manikandan |
இவ்வளவு தானா.?! 2 வாரத்தில் ஓடிவிடுகிறார்கள்.! வருத்தப்பட்ட நயன்தாரா காதலர்.!
X

விக்னேஷ் சிவனின் பதிவால் நயன்தாரா ரசிகர்கள் பதட்டம்!

போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். முதல் படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் விக்னேஷ் சிவன் இயக்குனராக இடம் பிடித்தார். அவரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது. அப்படத்தின் படப்பிடிப்பில் அவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் உருவானது.

தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.

படத்தில் இவரின் வெற்றி கூட்டணியான விஜய் சேதுபதி, நயனுடன் சமந்தாவும் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் ஒரு பேட்டி ஒன்றில் தற்போது உள்ள உதவி இயக்குனர்கள் ஒரு படத்தை கூட முழுமையாக முடிக்காமல் இரண்டே வாரங்களில் சென்று விடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்களேன்- எங்க குருவே நீங்க தான் சார்.! வெங்கட் பிரபுவை புகழ்ந்த இளம் முன்னணி இயக்குனர்கள்.!

அதாவது, ஒரு படத்தை முழுமையாக முடித்தால் தான் அதனுடைய புரிதல், அனுபவம் எல்லாம் தெரியும் . எதுவுமே தெரியாமல் இதுதான் கதையா என்று சொல்லி விட்டு சென்று விடுகிறார்களாம். இதனை விக்னேஷ் சிவன் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Next Story