நியூயார்க்கில் அதர்வாவுக்கு செம சர்ப்ரைஸ்!.. அப்பா முரளி போட்டோவை ஸ்க்ரீனில் பார்த்ததும் ஹேப்பி!..

Published on: May 13, 2024
---Advertisement---

நடிகர் அதர்வா முரளியின் 35-வது பிறந்தநாள் சமீபத்தில் நியூயார்க் நகரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நியூயார்க்கில் உள்ள முக்கியமான சாலையில் வைக்கப்பட்டிருந்த பெரிய ஸ்க்ரீ்னில் திடீரென நடிகர் முரளியின் புகைப்படம் மற்றும் அவருக்கு அருகே சிறுவயதில் அதர்வா இருக்கும் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் அதர்வா முரளியின் லேட்டஸ்ட் புகைப்படம் திரையிடப்பட்டு ஹேப்பி பர்த்டே அதர்வா என ஒலிக்கப்பட்ட நிலையில், அதைப் பார்த்து சந்தோசத்தில் நடிகர் அதர்வா துள்ளி குதித்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. தமிழ் சினிமாவில் விஜயகாந்த்தை போல தனக்கென தனி ரசிகர் வட்டத்தை கொண்டவர் நடிகர் முரளி. மாரடைப்பு காரணமாக இளம் வயதிலேயே அவர் உயிரிழந்த நிலையில், அவரது மகன் அதர்வா நடிகராக பானா காத்தாடி படத்தில் அறிமுகமானார்.

இதையும் படிங்க:  விஜய்யை விட வேகமா இருக்காரே ரஜினிகாந்த்!.. அந்த வேலையை அதுக்குள்ள முடிச்சிட்டாராம்!..

பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படம் அவரை நல்ல நடிகராக மாற்றியது. முப்பொழுதும் உன் கற்பனையே, இரும்பு குதிரை, 100, பூமராங், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், பட்டத்து அரசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், ஆரம்பத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பு அதன் பின்னர் அவர் நடிக்கும் படங்களுக்கு கிடைக்காமல் போன நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பெரிதாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கியே இருக்கும் அதர்வா அடுத்ததாக தனது தம்பி ஆகாஷ் முரளியை சினிமாவில் ஹீரோவாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படிங்க: கமல் ஏன் டென்ஷன் ஆனாரு?. ரஜினி எப்படி ஜாலி மேனா இருந்தாரு!.. ஜனகராஜ் கலகல பேட்டி

தனது அண்ணன் அதர்வாவின் 35-வது பிறந்தநாளை முன்னிட்டு நியூயார்க் நகரில் பிறந்தநாளை கொண்டாட இப்படி ஒரு ஏற்பாடு செய்திருந்ததே அவரது தம்பி ஆகாஷ் தான் என்பதையும் அதர்வா தனது இன்ஸ்டாகிராம் போஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் அதர்வாவின் டேனியல் பாலாஜி சித்தப்பா உயரிழந்த போது அதர்வாவின் அம்மா, அதர்வா மற்றும் ஆகாஷ் முரளி ஆகியோர் இறுதிச் சடங்கில் பங்கேற்று அனைத்து காரியங்களையும் செய்தனர். கூடிய சீக்கிரமே அதர்வாவும் ஒரு நல்ல படத்தில் நடிக்க கதைகளை தேர்வு செய்து வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: குடும்பமா சேர்ந்து அசிங்கப்படுத்திட்டாங்களா… கோபியை வெளியேத்த முடிவெடுத்த எழில்…

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/p/C66bXGiPHr6/

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.