ஆஃபிஸ போட்டாரு! கல்லா கட்ட ஆரம்பிச்சுட்டாரு!.. - மற்றுமொரு பிரம்மாண்டத்திற்கு தயாரான அட்லீ

by Rohini |   ( Updated:2024-01-14 09:43:18  )
atlee
X

atlee

Director Atlee: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் இயக்குனர் அட்லீ. ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் பின் ராஜா ராணி படத்தின் மூலம் தன் முதல் அறிமுகத்தை பதிவு செய்தார். எடுத்து வைத்த முதல் அடியே வெற்றிப் பாதையாக அமைந்தது.

அதனை தொடர்ந்து விஜயை வைத்து பேக் டு பேக் ஹிட் படங்களை கொடுத்து விஜய்க்கு இவர்தான்பா என்று சொல்லுமளவிற்கு அவரை மாஸ் ஹீரோவாக காட்டினார் அட்லீ. விஜயின் பீஸ்ட் படம் தோல்வியின் போது கூட ரசிகர்கள் அனைவரும் 'அட்லீயை கொண்டு வாங்கடா' என்றுதான் கூறி வந்தார்கள்.

இதையும் படிங்க: பேராசையால எல்லாம் போச்சி!.. அயலானோட எல்லாம் ஓவர்!. நிம்மதி பெருமூச்சி விட்ட எஸ்.கே!..

அந்தளவுக்கு விஜயை திரையில் எப்படி காட்ட வேண்டுமோ அதன் நுணுக்கங்களை நன்கு தெரிந்தவர் அட்லீ. ஆனால் விஜய் படங்களை அடுத்து தமிழில் எந்தப் படங்களையும் கொடுக்கவில்லை. அதனால் பாலிவுட் பக்கம் சென்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

ஷாரூக்கானை வைத்து ப்ளாக் பஸ்டர் ஹிட் படமான ஜவானை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் பேசப்படும் இயக்குனராக மாறியிருக்கிறார் அட்லீ. 1000 கோடியை தாண்டி அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரி குவித்தது.

இதையும் படிங்க: இந்த கடையில எல்லாமே செம ஒர்த்.. நடிகை கௌதமி செய்த பொங்கல் ஷாப்பிங்!.. வைரல் வீடியோ!

இதன் மூலம் அட்லீ மும்பையிலேயே செட்டிலாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. அதற்கேற்ற வகையில் மும்பையில் தனக்கு சொந்தமாக அலுவலகம் ஒன்றை கட்டி வருவதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் இன்று அட்லீயின் மனைவியான பிரியா அட்லீயின் பெயரில் அவர் ஒரு படத்தை தயாரிக்கிறாராம்.

அதற்கான பூஜைதான் இன்று போடப்பட்டிருக்கிறது. ஹிந்தியில் சார்மிங்கான ஹீரோவாக வலம் வரும் வருண் தவானின் 18வது படத்தை பிரியா அட்லீதான் தயாரிக்கிறார். அந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ்தான் லீடு ரோலில் நடிக்கிறார். அது சம்பந்தமான வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: சந்தானத்தோட நடிச்சா நீ காலி!. சிவகார்த்திகேயனை தடுத்து காப்பாற்றிய நண்பர்.. அது மட்டும் நடக்கலனா!…

Next Story