பத்தாவை ஆஸ்காருக்கு கொண்டு செல்வேன்- அட்லீ உறுதி!
பத்தா படத்தை ஆஸ்கர் வரை கொண்டு செல்ல வேண்டும் என்ற அட்லீயின் பேச்சு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் அட்லீ, தனது தயாரிப்பில் வெளியாகியுள்ள பத்தா திரைப்படத்தை பாராசைட் போல ஆஸ்கர் விருதுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
எனது பள்ளிப் பருவத்தில் விஜய் சாருடன் படம் இயக்குவேன் என்றும், ஷாருக்கான் சாரை வைத்து இந்தியில் ரூ.1000 கோடி வசூல் செய்யும் படத்தை கொடுப்பேன் என்றும் கூறியபோது பலரும் சிரித்தார்கள். ஆனால் அதை நான் செய்து காட்டினேன். அதேபோல் ராக்கா படத்தையும் ஆஸ்கருக்கு அழைத்துச் செல்வேன். ஒருவேளை ஆஸ்கர் வென்றால் அங்கு தமிழில் மட்டுமே பேசுவேன். நாம் அதை சாதிக்க முடியும் என அவர் நம்பிக்கையாக பேசியுள்ளார்.
இதனிடையே, அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘ராக்கா’ படத்தின் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்காக 37 கலைஞர்களை ஒரே நேரத்தில் மோஷன் கேப்சர் செய்த சாதனை Guinness World Records-ல் இடம்பெற்றுள்ளது.
ராக்கா திரைப்படம் 2027ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்படத்தை ஆஸ்கர் வரை கொண்டு செல்ல வேண்டும் என்ற அட்லீயின் பேச்சு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.




