இந்தில விருது கொடுக்கலன்னா என்ன?.. இன்டர்நேஷனல் பெஸ்ட் படமே என் படம்தான்!.. கெத்துக்காட்டிய அட்லீ!
தமிழில் ராஜா ராணி மூலம் அறிமுகமான அட்லீ அடுத்து தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார். அதன் பின்னர் பாலிவுட்டுக்கு சென்ற அட்லீ முதல் படமே ஷாருக்கானை வைத்து இயக்கி கடந்த ஆண்டு இண்டஸ்ட்ரி ஹிட் படமாக ஜவான் படத்தை மாற்றினார்.
பிலிம்ஃபேர் விருது விழாவில் ஜவான் படத்துக்கு அதிக விருதுகள் கிடைக்காமல் அனிமல் படத்துக்குத்தான் ஆறு விருதுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: லாஸ் ஆன லால் சலாம்!.. திங்கட்கிழமை வசூல் நிலவரம் இவ்வளவு மோசமா?.. ஐஸ்வர்யா அடுத்து படம் பண்ணுவாரா?..
இந்நிலையில், அனிமல் செல்ல முடியாத உயரத்துக்கு தனது ஜவான் படத்தை சர்வதேச திரைப்பட போட்டியில் பங்கேற்க வைத்து லாஸ் ஏஞ்சல்ஸில் மாஸ் காட்டியுள்ளார் அட்லீ.
கடந்த ஆண்டு ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் மேடையில் விருதுகளை அள்ளிய நிலையில், இந்த ஆண்டு அஸ்திரா அவார்ட்ஸ் என ஹாலிவுட்டில் நடக்கும் விருது விழா நிகழ்ச்சியில் அட்லீயின் ஜவான் திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் பிரிவில் நாமினேட் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: SK23 படத்துக்கு பின் மாஸ் நடிகருடன் இணையும் முருகதாஸ்!. விட்ட இடத்தை பிடிப்பாரா?!…
அந்த விருது விழா நிகழ்ச்சியில் ஆஸ்கருக்கு தேர்வான பல சர்வதேச படங்களுடன் அட்லீயின் ஜவான் திரைப்படமும் போட்டியிட்டது. Anatomy of a Fall திரைப்படம் சிறந்த படத்துக்கான விருதை வென்றது.
அட்லீ கோட் சூட்டில் செம மாஸாக அந்த விருது விழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு கலந்து கொண்ட வீடியோ காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஷாருக்கானுக்கும் ரெட் சில்லிஸ் நிறுவனத்துக்கும் நன்றி சொல்லியிருக்கிறார்.
Thank you Astra awards 2024
For Jawan
Thank you @iamsrk sir @gaurikhan Mam @RedChilliesEnt ,my team ❤️ and @priyaatlee pic.twitter.com/3bj3Kn41ho— atlee (@Atlee_dir) February 12, 2024