40 வருஷம் ஆச்சா? பிறவிப் பயனை அடைந்த சஞ்சய் தத் - ‘லியோ’ படத்தின் மூலம் பெருமை சேர்த்த லோகேஷ்

by Rohini |
sanjay
X

sanjay

Leo Sanjay Dutt : விஜய் நடிப்பில் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் வரும் 19 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்தப் படத்தை லலித் தயாரிக்க லோகேஷ் இயக்கியிருக்கிறார்.

அனிருத் இசை லியோ திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. படம் ரிலீஸ் ஆக இன்னும் 8 நாள்களே இருப்பதால் படத்தை பற்றிய அப்டேட்களை அவ்வப்போது லோகேஷிலிருந்து டெக்னீஷியன்கள் வரை பேட்டிகளில் கூறிவருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய் காப்பி அடிக்கும் அந்த நடிகரே செஞ்சிருக்காரு… அப்போ இந்த விஷயத்துலையும் செய்றது தானே சரி..!

அந்த வகையில் போதும் என்று சொல்லுமளவிற்கு லோகேஷ் பல விஷயங்களை பற்றி சமீபத்திய பேட்டிகளில் கூறினார். இந்த நிலையில் லியோ படத்தை பற்றி ரத்னகுமாரும் சில சுவாரஸ்ய சம்பவங்களை கூறினார்.

அதாவது ஒரு ஒன்றரை பக்க வசன பேப்பரை லோகேஷிடம் வந்து கொடுத்தார்களாம். அதை படமாக்கும் போது வெறும் எக்ஸ்பிரஷன் மூலமாகவே அந்த காட்சிகளை படமெடுத்து விட்டாராம் லோகேஷ்.

இதையும் படிங்க: ஜூம் பண்ணி பாத்தா உறைஞ்சி போய்டுவ!.. கையை தூக்கி கண்டதையும் காட்டும் சமந்தா!…

அந்த அளவுக்கு அந்த ஒன்றரை பக்க வசனங்கள் அவர்கள் காட்டும் எக்ஸ்பிரஷன் மூலமாகவே ரசிகர்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு படமாக்குவதில் திறமைசாலி என ரத்னகுமார் கூறினார்.

மேலும் சஞ்சய் தத். அவர் நடக்கும் நடையிலேயே அனைவரும் பிரமித்துப் போய்விடுவோம் என்று கூறினார். சஞ்சய் தத்தை லோகேஷ் அப்பா என்றும் லோகேஷை சஞ்சய் தத் மகன் என்றும் தான் அழைப்பார்களாம்.

இதையும் படிங்க: டாப் ஹிட் கேரக்டரை மிஸ் பண்ணிட்டு ஃபீல் பண்ணிய ராகவா லாரன்ஸ்…! ஆனா கடைசியில நடந்தது தான் ட்விஸ்ட்டு..!

இதில் சற்று கூடுதலான தகவல் என்னவெனில் சஞ்சய் தத் முதன் முதலில் சினிமாவிற்கு ராக்கி என்ற படத்தின் மூலம் 1981 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். அந்த முதல் படத்தின் முதல் ஷார்ட் காஷ்மீரில் உள்ள பெகல்காம் என்ற இடத்தில் தான் படமாக்கினார்களாம்.

அதன் பிறகு அந்த இடத்திற்கு சஞ்சய் தத்தை அழைத்துக் கொண்டு போனவர் லோகேஷ்தானாம்.அதுவரை பெகல்காமிற்கு சஞ்சய் தத் போகவே இல்லையாம். இந்த லியோ படத்தின் மூலம் கிட்டத்தட்ட 40 வருடத்திற்கு பிறகு முதல் ஷார்ட் எடுத்த இடத்தை பார்க்க முடிந்ததாக சஞ்சய் மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டாராம்.

Next Story