விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
தங்கராஜுக்கு திடீரென பிபி எல்லாம் எகிறி இருக்க அவர் ரொம்ப பயத்திற்கே சென்று விடுகிறார். அவரை பார்க்க ரேவதி அப்பா, அம்மா வந்து ஆறுதல் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். பின்னர் எல்லாரும் சாப்பிடலாம் எனக் கேட்க கீரை இருக்கா பொறியல் இருக்க என புலம்புகிறார்.
தங்கராஜ் பயத்தில் இருப்பதால் அவரை மொத்த குடும்பமே கலாய்த்து சமாதானம் செய்துக்கொண்டு இருக்கின்றனர். பின்னர் தங்கராஜுக்கு தெரிந்தவர் வந்து தன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்து இருப்பதாக சொல்லிவிட்டு நீங்கள் வரணும் எனக் கூப்பிட அவர் நான் வரவில்லை. அங்கிருந்து கால் செய்து அனுப்புகிறார்.
பின்னர் மலர் தயாராகி இருக்கிறார். மதியிடம் சொல்லிவிட்டு பாக்கியராஜுடன் அம்மா, தம்பியை அழைத்து கொண்டு பெண் பார்க்க செல்கின்றனர். சந்தோஷமாக பேசி சிரித்துக்கொண்டு செல்ல அங்கு நடக்க இருப்பது தெரியாமல் இருக்கின்றனர்.
பின்னர் தங்கராஜூக்கு தெரிந்தவர் தான் அந்த பெண்ணின் அண்ணன் என்பதால் கால் செய்து தங்கராஜிடம் பேசுகிறார். வீடியோகால் செய்ய சொல்ல மாப்பிள்ளை, அக்கா அவர் கணவர் என மலர் பாக்கியராஜை காட்ட தங்கராஜ் கடுப்பாகிவிடுகிறார். அடுத்து ஆப்பு வைக்கப்போறது என்னவோ உண்மைதான்!







