பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளரான முத்துக்குமரன் மீதான சர்ச்சைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் சூழலில், சக போட்டியாளரான விஜே பார்வதி அவரை மறைமுகமாகச் சாடி பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பிக்பாஸ் 8 சீசனில் முத்து குமரன், வி ஜே பார்வதி, சௌந்தர்யா என பலர் பங்கேற்றனர். அந்த சீசனில் டைட்டில் வின்னராக முத்து குமரன் வெற்றி பெற்றார். இந்த நிலையில் இன்ஸ்டா பிரபல வஹிதா என்ற பெண் முத்துகுமார் மீது வைத்த குற்றசாட்டு பெரும் புயலை கிளப்பியது. தனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள விஷயம் தெரிந்தும், முத்துக்குமரன் ஆறுதலாகப் பேசி நெருக்கமானதாகவும், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாகவும் வஹிதா வீடியோக்கள் மூலம் தெரிவித்தார். இந்த விவகாரத்தால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகவும், பின்னர் சிகிச்சைக்குப் பின் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவம் கடந்த இரு தினக்களக அபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இக்குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள முத்துக்குமரன், நாங்கள் நண்பர்களாக மட்டுமே பழகினோம்; காதலிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். தங்களிடையே நடந்த உரையாடல்களும் வீடியோக்களும் திட்டமிட்டு எடிட் செய்யப்பட்டு, தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், சம்பந்தப்பட்ட வீடியோக்களை நீக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், பிக் பாஸ் சக போட்டியாளரான விஜே பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முத்துக்குமரனை மறைமுகமாக விளாசியுள்ளார்.
முத்துக்குமரன் பிக் பாஸ் கோப்பையை கையில் ஏந்தியிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த பார்வதி, இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வின்னர்தானே அன்னைக்கு நமக்கு ரெட் கார்டு கொடுக்கணும்னு பேசினார்? LOL! சரியான தேர்வு! பிக் பாஸின் போலி வெற்றியாளர்களும், அவங்களோட நல்ல மனிதர்’ இமேஜ் பில்டிங்கும்! ர்ம்உ பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் ஒழுக்கம், கொள்கை, தவறுகளைச் சுட்டிக்காட்டுதல் என பேசி டைட்டில் வென்ற முத்துக்குமரன், தற்போது சொந்த வாழ்க்கையில் பெரும் சர்ச்சையில் சிக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டியே பார்வதி இவ்வாறு கேலி செய்துள்ளார்.







