அழகே அழகு தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தொகுப்புகள்!
மலரின் தம்பியை பெண் பார்க்க பாக்கியராஜும் சென்றார் என்பதை சொல்ல தங்கராஜ் அவர் மாமனாருக்கு கால் செய்கிறார். அங்கு அவரிடம் நடந்த விஷயங்களை விலாவரியாக போட்டுக்கொடுத்து விடுகிறார்.
அதே நேரத்தில் ரேவதியிடம் சென்று பிபி செக் செய்யு சுகர் செக் செய்யு என வேலை சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால் எதுவும் மாறவில்லை. சாயந்திரம் பார்த்தது போல எல்லாமே அப்படியே இருக்கு என்கிறார்.
பின்னர் பாக்கியராஜ் பெண் பார்க்க சென்றதாகவும், அதை தெரிந்தவுடன் உங்க அப்பாவிடம் சொல்லிவிட்டேன் என்கிறார். இதை கேட்ட ரேவதி பதறி போய் என்ன செய்வது என தெரியாமல் பதறி தன் போனை எடுக்கிறார்.
ஆனால் தங்கராஜ் அதை பிடுங்கி வைத்துவிட்டு நீ கொடுத்தா சொல்லி அவங்களை தயார்படுத்திடுவ அதனால நீ எதுவும் சொல்ல கூடாது என போனை வைத்துவிடுகிறார். அத்தைக்கு மாத்திரை கொடுக்க செல்வதாக சொல்லிவிட்டு ரூமுக்கு செல்கிறார்.
அங்கு அவர் மாமியார் பாத்ரூம் சென்று விட்டு வருவதாக சொல்கிறார். அந்த கேப்பில் பாக்கியராஜுக்கு விஷயத்தை மெசேஜ் போட்டு விடுகிறார். பின்னர் பார்ப்பாரா என தெரியாததால் ஒரு கால் வைத்து விடுகிறார்.
இதே நேரத்தில் பாக்கியராஜ் மற்றும் மலர் வீட்டுக்கு சென்று கொண்டு இருக்கும் போது என்ன சொல்லலாம் எனவும் பேசிக்கொண்டு வருகின்றனர். அந்த நேரத்தில் ஒரு ரிங் வர மீண்டும் அழைத்து பார்க்கின்றனர்.
ஆனால் ரேவதி போனை எடுத்து ராங் நம்பர் எனக் கூறிவிட்டு மெசேஜை பாரு என போனை வைத்துவிடுகிறார். என்ன சொன்னா ராங் நம்பருனு சொன்னாலே என யோசித்துவிட்டு மெசேஜ் பார்க்க சொன்னா என்கிறார். மலர் அப்போ அதை பாருங்க என்கிறார்.
மெசேஜை பார்த்தவுடன் வீட்டில் பெண் பார்க்க போனது தெரிந்துவிட்டது என்பதை பாக்கியராஜ் மலர் தெரிந்து ஷாக் ஆகின்றனர். பிரச்சனை அவளுக்கு இல்ல. நமக்கு தான் என மலர் பதறுகிறார்.







