Connect with us

Cinema News

Nayanthara: மிரட்டிய நயன்தாரா – விக்கி ஜோடி!.. காண்டான தனுஷ்!.. அட அவர் மேல தப்பே இல்லையே!…

நயன்தாரா இன்று வெளியிட்ட அறிக்கையும், நடிகர் தனுஷ் எதற்காக என்ஓசி கொடுக்கவில்லை என்பதற்கான பின்னணியும் வெளியாகி இருக்கின்றது.

நேற்று வரை சமூக வலைதள பக்கங்களில் கங்குவா விமர்சனங்கள் மிகவும் பரபரப்பாக உலா வந்தது. அதையெல்லாம் ஓரம் கட்டி இருக்கின்றது நடிகை நயன்தாராவின் அறிக்கை. கிட்டத்தட்ட மூன்று பக்கங்களுக்கு மூச்சு விடாமல் நடிகர் தனுசை கிழித்து தொங்க விட்டிருக்கின்றார் நடிகை நயன்தாரா. கடந்த இரண்டு வருடங்களாக ஒரு பிரச்சனை பூதாகரமாக வெடித்து வருகின்றது. அதாவது நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: முதல் வரியிலே தனுஷ் மீது இவ்வளவு வன்மமா? வேற ஏதோ மாஸ்டர் பிளான் மாதிரி தெரியுதே…

இவர்களின் திருமணம் தொடர்பான வீடியோவை netflix நிறுவனம் டாக்குமெண்டரியாக வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருந்தது. நயன்தாரா திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே இந்த வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது. அதற்கு பின்னால் இருப்பது நடிகர் தனுஷ் தான்.

நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து சில காட்சிகளை பயன்படுத்துவதற்கு அவர் அனுமதி கொடுக்கவில்லை. மேலும் வெறும் 3 நொடிக்கு பத்து கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதுதான் தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்து இருக்கின்றது. இதற்கு தான் நடிகை நயன்தாரா மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவுக்கும் தனுஷ்க்கும் இடையில் என்ன நடந்தது? எப்படி பிரச்சினை தொடங்கியது என்பது குறித்து வலைப்பேச்சு யூடியூப் சேனலில் தெரிவித்திருக்கிறார்கள். ‘நானும் ரவுடிதான் திரைப்படம் தனுஷ் தயாரிப்பில் எடுக்கப்பட்டு வந்தது. விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதல் வேகத்தில் விக்னேஷ் சிவன் படத்தின் இயக்கத்தில் கோட்டை விட்டுவிட்டு பட்ஜெட்டை எங்கேயோ இழுத்து விட்டு விட்டார். 10 கோடிக்கும் மேல் படத்தின் பட்ஜெட் சென்று விட்டதால் நடிகர் தனுஷ் கடுப்பாகி இந்த படத்தை ட்ராப் செய்து விடுகிறேன் என்று கூறிவிட்டார்.

அதன் பிறகு நடிகை நயன்தாரா உள்ளே புகுந்து பணத்தை செலவழித்து இந்த படத்தை எடுத்து முடித்தார் விக்னேஷ் சிவன். அப்போது இருந்தே நயன்தாராவுக்கும் தனுசுக்கும் இடையில் சில முரண்பாடுகள் இருந்தது. ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்து வந்தார்கள். இந்த சூழலில் தான் நடிகை நயன்தாராவின் திருமணம் நடைபெற்று முடிந்தது. அதன் பிறகு தான் நடிகை நயன்தாரா திருமண வீடியோவை ஆவணப்படமாக எடுப்பதற்கு முடிவு செய்தார்.

நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து சில காட்சிகளை அந்த ஆவணப்படத்தின் ட்ரெய்லரில் பயன்படுத்தி இருந்தார்கள். இதை பார்த்து தனுஷ் தனது அனுமதி இல்லாமல் என்னுடைய படத்தின் காட்சிகளை பயன்படுத்தக் கூடாது என்று என்ஒசி கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்திருக்கின்றார்.  விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் முறைப்படி தனுசை சந்தித்து காட்சிகளை பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்கவே இல்லை.

விக்னேஷ் சிவன் இதற்கு பின்னால் ஒரு முக்கிய வேலையை பார்த்திருக்கின்றார். அது என்னவென்றால் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸிடம் போன் செய்து நானும் ரவுடிதான் பாட்டை பயன்படுத்திக் கொள்வதற்கு என்ஓசி போட்டு மெயில் அனுப்பி விடுங்கள் என்று கூறியிருக்கின்றார். இதை கேட்டு அதிர்ச்சியான ஸ்ரேயாஸ் மெயில் அனுப்பாமல் இருந்திருக்கின்றார்.

மீண்டும் மீண்டும் விக்னேஷ் சிவன் அவரிடம் தொல்லை செய்யவே அவர் தனுஷ் காதுக்கு இந்த விஷயத்தை கொண்டு சென்றிருக்கின்றார். இதை கேட்ட தனுஷ் முடியவே முடியாது என்று மறுப்பு தெரிவித்து இருக்கின்றார். அதன் பிறகு வெவ்வேறு தரப்பிலிருந்து தனுசுக்கு பயங்கரமான நெருக்கடி வந்துள்ளது. சம்பந்தமில்லாமல் பலரும் போன் செய்து விக்னேஷ் சிவனுக்கு என்ஓசி கொடுங்கள் என்று கூறி வந்தார்களா .

இதையும் படிங்க: கோலிவுட் ஹீரோக்களின் செண்டிமெண்ட் ஆயுதங்கள் இதுதான்!.. போட்டு பொளக்கும் புளூசட்டமாறன்…

ஒரு கட்டத்தில் அது மிரட்டல் ஆகவே மாறிவிட்டதாம். ஒரு கட்டத்தில் நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து உண்ணாவிரதம் இருக்க போகிறேன் என்றெல்லாம் மிரட்ட தொடங்கி விட்டார்கள். ஆனால் இதை எதையுமே தனுஷ் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லையாம்.

இவ்வளவு குடைச்சல் கொடுத்த காரணத்தால் தான் நடிகர் தனுஷ் என்ஓசி கொடுக்காமல் கடைசிவரை இழுத்தடித்து வந்திருக்கின்றார். இதை பார்த்து பொங்கிய நயந்தாரா இப்படி ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார். ஆனால் இது தற்போது சமூக வலைதள பக்கங்களில் தனுஷ் மீது தான் முழு தவறு இருக்கின்றது நயன்தாரா தரப்பில் எந்த தவறும் இல்லை என்பது போன்று பிரதிபலித்து வருகின்றது’ என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top