அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் பாக்கியா… கடுப்பில் கோபி… சந்தேகத்தில் ராதிகா… மாட்டிவிடுங்கப்பா…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கிச்சனில் பாக்யா செல்வியிடம் கத்திக்கொண்டு இருக்கிறார். அவருக்கு தான் வேற கல்யாணம் ஆச்சே என்ன ஏன் கடுப்படிச்சிக்கிட்டு இருக்காரு என்கிறார். நான் சும்மா இருக்க போறது இல்ல ஏதாவது கேட்டு விட போகிறேன் என்று கோபியை கழுவி ஊத்தி வருகிறார். ஒருக்கட்டத்தில் செல்வி நீங்க பழனிசாமி அண்ணனை கல்யாணம் செஞ்சிக்க வேண்டியது தானே எனக் கேட்கிறார்.
எனக்கு எத்தனை உறவு இருந்தாலும் ப்ரண்டா அவர் மட்டும் தான். அவர் கடைசி வரை அப்படியே இருக்கணும் என்கிறார். செழியன் மாடியில் நின்றுக்கொண்டு இருக்க அங்கு எழில் வந்து எனக்காக நின்றதுக்கு நன்றிடா என்கிறார். நமக்குள்ள என்ன இதெல்லாம் எனப் பேசிக்கொண்டு இருக்கும் போது கோபி வருகிறார். உங்க அம்மாவால தான் எல்லாம் என்கிறார். இதனால் எழில் மற்றும் செழியன் திட்டிவிட்டு செல்கின்றனர்.
இதையும் படிங்க: காதலியா நினைக்கனுமா? த்ரிஷா பத்தி மிஷ்கின் சொன்னதை கேளுங்க.. இதுதான் அல்டிமேட்
பின்னர் ரூமுக்குள் வரும் கோபி புலம்பிக்கொண்டு இருக்கிறார். அப்போ ராதிகா அவருக்கு ஆறுதலாக இருக்கிறார். நல்ல மூடில் இருக்கா ஆபிஸ் மூடின விஷயத்தை சொல்லிடலாம் எனத் தொடங்குகிறார். ஆனால் அந்த நேரத்தில் மெசேஜ் வந்து கோபி பிசினஸ் செய்றது எனக்கு தான் பெருமை எனப் பேசிவிடுகிறார். இதனால் விஷயத்தினை சொல்லாமல் மழுப்பிவிடுகிறார்.
பின்னர் காலையில் எல்லாரையும் அழைத்து ரெஸ்டாரெண்ட் திறப்பதை குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார். இதனால் எல்லாரும் சந்தோஷமாகின்றனர். கோபி கடுப்பாகிறார். ஈஸ்வரி காசுக்கு என்ன செய்வ லோன் எடுப்பியா எனக் கேட்கிறார். இல்லை மாநாட்டு காசெல்லாம் இருக்கு என்கிறார். ராதிகாவிடம் சென்று பாக்கியா ரெஸ்டாரெண்ட் திறக்க இருக்கும் விஷயத்தினை கூறுகிறார்.
இதையும் படிங்க: பாடி சேஃப் பாத்தா ஜிவ்வுன்னு ஏறுது!.. பாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு மாறிய ரம்யா பாண்டியன்!…
பேசாம நானும் அதையே செஞ்சிருக்கலாம் என்கிறார். அப்படி உங்க பிசினஸில் என்னத்தான் பிரச்னை? நான் வரேன் என்கிறார். ஆனால் கோபி வேண்டாம் என சமாளித்து அனுப்புவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.