ஈஸ்வரி முகத்தில் அடித்த எழில்… கோபிக்கு ஆப்படித்த புது தொழில்.. என்னங்க இப்படி ஆச்சு?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஹாலுக்கு வரும் எழில் ஈஸ்வரியிடம் அமிர்தாவிடம் என்ன கேட்டீங்க என்கிறார். எல்லா குடும்பத்துல கேட்கிறது தானே. அதுக்குள்ள உன்கிட்ட போட்டு கொடுத்துட்டாள. உடனே எழில் இனி அமிர்தாவிடம் இதை பற்றி பேசாதீங்க என்கிறார்.
ஏன் என ஈஸ்வரி கேட்க காரணம் கேட்காதீங்க. என்ன வேண்டும் என்றாலும் பேசுங்க. ஆனா அமிர்தாகிட்ட குழந்தையை பத்தி பேசாதீங்க என்கிறார். குழந்தை முடிவை நாங்க தான் எடுக்கணும். நீங்க தலையிட கூடாது என்கிறார். இதனால் ஈஸ்வரியை ராமமூர்த்தி அடக்குகிறார். இந்த விஷயத்தினை பற்றி அமிர்தாவிடம் எதுவும் பேசாதீங்க என்கிறார்.
இதையும் படிங்க: 27 முறை விஜயுடன் மோதிய சூர்யா படங்கள்!… முதன் முதலில் 150 கோடியை குவித்த தளபதி படம்!..
கோபி ரெஸ்டாரெண்டுக்கு வருகிறார். அங்கு, உதவியாளர்கள் எல்லாம் நின்று பேசிக்கொண்டு இருக்கின்றனர். செஃப் எங்க எனக் கேட்க அவர் லீவில் இருப்பதாக சொல்கின்றனர். அவர் மனைவிக்கு உடம்பு சரியில்லை என ஷாக் கொடுக்கின்றனர். இதனால் கோபி அதிர்ச்சி அடைகிறார்.
அங்கிருப்பவர்களுக்கு தனியாக சமைச்சு பழக்கம் இல்ல என்கின்றனர். இதனால் கோபி விழி பிதுங்குகிறார். ராதிகாவுக்கு கால் செய்ய அவர் ஆபிஸில் ரொம்ப பிஸியா இருக்கேன் என்ன விஷயம் என்கிறார். செஃப் லீவில் இருப்பதாக சொல்ல சூப்பர் இதுக்கு தான் பாராட்டாதீங்க எனத் திட்டுகிறார். ராதிகாவை வந்து ஹெல்ப் பண்ணுறீயா எனக் கேட்க அவர் திட்டி போனை வைத்து விடுகிறார்.
இதையும் படிங்க: எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் பப்ளிசிட்டி முக்கியம்!.. ரத்னம் படத்தின் கதை இதுதான்.. ஹரி ஓபன் டாக்!..
பின்னர் கால் செய்து என் ஆபிஸுக்கு கொடுக்க வேண்டிய மதிய சாப்பாடு வந்தே ஆகணும் என்கிறார். பாக்கியா ரெஸ்டாரெண்ட்டில் பார்க்கிங்கிற்கு இடம் தேடி கிடைத்த ஓனரிடம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அவர் வாடகையாக 30 ஆயிரம் கேட்க பழனிசாமி 10 ஆயிரம் என்கிறார். அவரிடம் வாக்குவாதம் செய்து 10 ஆயிரத்துக்கு முடித்து வைக்கிறார். இங்கு கோபி ஈஸ்வரிக்கு கால் செய்து உன் பையன் பிரச்னையில் சிக்கி இருக்கேன். செஃப் லீவில் இருப்பதாக சொல்ல ஈஸ்வரியும் ஷாக் ஆகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.