ஒருவழியா கேண்ட்டீன் தொல்லை இனி இல்லை..! அடுத்து கணேஷ் பிரச்னையா? பாவம் தான் பாக்கியா!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் சமையலறையில் உட்கார்ந்து எல்லாரும் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். அப்போ பாக்கியா ஸ்வீட் செய்து கொடுக்க என்ன விஷேசம் எனக் கேட்கின்றனர். இன்னைக்கு தான் பொருட்காட்சியோட கடைசி நாள் என்கிறார். ஈஸ்வரிக்கு வைக்க அவர் வேண்டாம் எனக் கூறி விடுகிறார். உடனே பாக்கியா எல்லாரும் பொருட்காட்சிக்கு வந்துட்டாங்க.
நீங்க இன்னைக்காது வாங்க அத்தை என்கிறார். நான் வரலை என்கிறார். ராமமூர்த்தியும் வலுக்கட்டாயம் செய்து அழைக்க இல்லை தனக்கு கால் வலிப்பதாக சொல்லி விடுகிறார். அதையடுத்து பாக்கியா கடைசி நாள் பொருட்காட்சியில் வேலை செய்து கொண்டு இருக்க தன் குடும்பத்தை சுற்றி பார்த்து சந்தோஷப்பட்டு கொள்கிறார். பழனிசாமியும் அங்கு வர அவரை கடைசி நாள் என்பதால் அழைத்ததாக சொல்லுகிறார்.
இதையும் படிங்க: பிரபாஸுக்கு வேட்டு வைத்த பாலிவுட் பாட்ஷா!.. இனிமே இந்த பக்கம் வந்துடாதீங்கன்னு எச்சரிக்கிறாரா?
அந்த நேரத்தில் இனியா அங்கு வந்து அமைச்சர் வரும் விஷயத்தை சொல்கிறார். அங்கு வரும் அமைச்சர் பாக்கியாவின் கேண்ட்டீனை வெகுவாக பாராட்டிக் கொண்டு இருக்கிறார். ஒரு பொண்ணு முதல்முறையா கேண்ட்டீன் வச்சிருக்கு. சந்தோஷப்படுவதாக சொல்லுகிறார். இதையடுத்து பாக்கியாவை பெருமைப்படுத்துகிறார். இங்கு வீட்டில் கோபி தனியாக அமர்ந்து கொண்டு இருக்க ஈஸ்வரி வருகிறார்.
காசை கட்டிட்டியா எனக் கேட்க இல்லை ஆனா சமாளிச்சிடுவேன் என்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் செழியன் டிவியை ஆன் செய்து பாக்கியாவை காட்ட ஈஸ்வரிக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது. பின்னர் டிவியில் ஓடுவதை வீடியோவாக எடுத்து ஜெனிக்கு அனுப்ப அவரும் பாக்கியாவுக்கு வாழ்த்து சொல்ல செழியன் சந்தோஷப்படுகிறார். பின்னார் எல்லாம் முடிந்து அனைவரும் கேண்ட்டீனில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஒரே ஒரு செல்ஃபியில் பிரபலமான மாடர்ன் தியேட்டர்ஸ்!.. எப்படி அழிஞ்சி போனது தெரியுமா?..
என்னுடைய வெற்றிக்கு நீங்க தான் காரணம் என தன் குடும்பத்திடம் சொல்லி மகிழ்ச்சி அடைகிறார். இதையடுத்து அங்கு வரும் கணேஷை பார்த்து பாக்கியா அதிர்ச்சி ஆகிறார். அமிர்தா மற்றும் எழிலை வீட்டுக்கு அனுப்பி விடுகிறார். கணேஷிடம் வர நான் வாழ்த்து சொல்ல தான் வந்தேன். இன்னைக்கு எதுவும் சொல்ல மாட்டேன். நீங்க டைம் கேட்டீங்க அது முடிய இன்னும் 2 நாள் தான் இருக்கு என மிரட்டி விட்டு செல்ல பாக்கியா அதிர்ந்து நிற்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.