Connect with us
modern

Cinema News

ஒரே ஒரு செல்ஃபியில் பிரபலமான மாடர்ன் தியேட்டர்ஸ்!.. எப்படி அழிஞ்சி போனது தெரியுமா?..

ஏவிஎம் நிறுவனம் தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு பாரம்பரிய தயாரிப்பு நிறுவனமாகும். ஆனால் அந்த நிறுவனம் வருவதற்கு முன்பே தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த நிறுவனமாக இருந்தது மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். இதன் அதிபர் டி.ஆர். சுந்தரம். தமிழ் சினிமாவில் ஒரு மறுமலர்ச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய நிறுவனமாக மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அமைந்தது. சமீபத்தில் அந்த தியேட்டரின் நுழைவாயில் முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அதிலிருந்தே மாடர்ன் தியேட்டர்ஸுக்கும் திராவிடத்திற்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழத் தொடங்கியது. இப்போது அந்த நிறுவனம் செயல்பாட்டிலும் இல்லை. அதற்கு என்ன காரணம் என்பது போன்ற பல தகவல்களை அரசியல் விமர்சகர் காந்தராஜ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் மூலமாக 1950 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பொன்முடி’. இதில் ஜே.ஜே.விஜயம் என்பவர் நடித்தார். இந்தப் படம் தான் சர்வதேச அளவில் விருதை வாங்கிய முதல் இந்திய திரைப்படமாம்.

இதையும் படிங்க: உன்கிட்ட ஹைலைட்டே அதுதான்!.. அந்த ஏரியாவை நச்சின்னு காட்டும் ரம்யா பாண்டியன்…

அதுமட்டுமில்லாமல் அந்தக் காலத்தில் திராவிட இயக்கங்கள் தொடர்பாக பல படங்களை தயாரித்து வெளியிட்டதும் இந்த நிறுவனம்தானாம். முதன் முதலில் கதை, திரைக்கதை என கலைஞர் கருணாநிதிக்கும் டைட்டில் கார்டில் பெயர் போட்டு பெருமைப்படுத்தியதும் இந்த நிறுவனம்தானாம். கண்ணதாசனை ஊரறிய செய்ததும் மாடர்ன் தியேட்டர்ஸ்தானாம். மாடர்ன் தியேட்டர்ஸ் மூலமாக சண்ட மாருதம் என்ற பத்திரிக்கை செயல்பட்டுக் கொண்டிருந்ததாம். அதில் ஆசிரியராக கண்ணதாசன்தான் இருந்திருக்கிறார். அதன் மூலம் சினிமாவில் கிடைத்த படம்தான் ‘சுகம்’.

அதே போல் நம்பியாருக்கும் வாழ்வு கொடுத்ததும் இதே நிறுவனம்தானாம். இந்த நிறுவனம் தான் அதிக படங்களை தயாரித்த முதல் நிறுவனம் என்றும் சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 110 படங்களை தயாரித்திருக்கிறதாம். அதுமட்டுமில்லாமல் முதன் முதலில் ஆங்கில படத்தை தயாரித்த நிறுவனமும் இதே நிறுவனம்தான் என்று சொல்லப்படுகிறது. ஹாலிவுட் நடிகர்களை வைத்து ஜங்கிள் என்ற ஆங்கில படத்தை தயாரித்ததாம்.

இதையும் படிங்க: கமலுக்கு வாக்கு கொடுத்த சிம்பு!.. அதனால வால சுருட்டி வச்சிக்கிட்டு நடிப்பாராம்.. இதுதான் விஷயமா?!..

பத்மினிக்கு அங்கீகாரம் கொடுத்ததும் மாடர்ன் தியேட்டர்ஸ்தானாம். மந்திரகுமாரி படத்தின் மூலம்தான் கலைஞரின் வசனம் பெருமளவு பேசப்பட்டதாம். அதற்கு காரணமும் இதே நிறுவனம்தானாம். இப்படி திராவிட இயக்கத்திற்கு பெருமளவு உறுதுணையாக இருந்த இந்த நிறுவன அதிபருக்கு திராவிட அரசு பெரிதாக ஒன்றும் பண்ணவில்லையாம்.

இதற்கு பின்னாடி வந்த ஏவிஎம் இப்போது வரை படங்களை தயாரிக்க மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் மட்டும் அப்படியே நின்று போனதற்கு காரணம் டி.ஆர்.சுந்திரத்திற்கு பிறகு வந்த அவர்கள் வாரிசுகள் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அவரின் வாரிசுகளுக்கு சினிமாவில் ஆர்வம் இல்லாததால் அப்படியே அந்த நிறுவனம் செயலிழந்து விட்டதாம். இப்போது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: பக்கா ஸ்கெட்ச் போட்ட கமல்! ஒன்னு இல்ல – டபுள் ட்ரீட் கொடுக்க களத்தில் இறங்கும் ஆண்டவர்

 

google news
Continue Reading

More in Cinema News

To Top