கேண்ட்டீனை பிரச்னை ஓவர்..! அடுத்து சைக்கோ எண்ட்ரி தான? மாலினி, கணேஷ் தொல்லை ஆரம்பம்..!

by Akhilan |
கேண்ட்டீனை பிரச்னை ஓவர்..! அடுத்து சைக்கோ எண்ட்ரி தான? மாலினி, கணேஷ் தொல்லை ஆரம்பம்..!
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கணேசை பாக்கியா பார்த்து அதிர்ச்சி ஆகிவிடுகிறார். அதை தொடர்ந்து அமிர்தாவை உள்ளே அனுப்பி ஸ்வீட் செய்ய சொல்கிறார். வெளியில் வந்து கணேசை இங்கே ஏன் வந்த எனக் கேட்கிறார். அவர் கொடுத்த டைமுக்குள் எதுவும் செய்யுங்க என்கிறார்.

இதை தொடர்ந்து, செழியன் ஜெனியின் தந்தையை பார்க்க ஷாப்புக்கு செல்கிறார். ஆனால் அவரை பார்க்க திடீரென அங்கே மாலினி வந்து விடுகிறார். இதில் அதிர்ச்சி ஆகி, ஜெனி அப்பாவை பார்க்க வந்து இருக்கேன். அவர்கிட்ட பேசி பிரச்னையை முடிக்கணும். கிளம்பு ப்ளீஸ் என்கிறார்.

இதையும் படிங்க: இது வேறமாறி வெற்றி!.. ஓடிடி தளத்தில் துவம்சம் பண்ண துணிவு.. இத்தனை கோடி பேர் பார்த்துருக்காங்களா!

ஆனால் மாலினி போகாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். இந்த நேரத்தில் அங்கு ஜோசப் வந்துவிட செழியன் அதிர்ச்சி ஆகிறார். இதனையடுத்து மாலினி செழியனுக்கு ஜெனியும் வேணும், நானும் வேணும் என்கிறார். சரி நான் கிளம்புறேன். முடிச்சிட்டு சீக்கிரம் வீட்டுக்கு வந்துற எனச் சொல்லிவிட்டு மாலினி கிளம்பிவிடுகிறார்.

இதில் கடுப்பான ஜோசப் உனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கணும் தான் இங்க வந்தேன். ஆனா நீ திருந்தவே இல்லை எனத் திட்டிவிட்டு செல்கிறார். இதனால் கண்ணீருடன் செழியன் பாக்கியாவை வந்து கட்டிப்பிடித்து அழுகிறார். ரெஸ்டாரெண்ட்டில் நடந்த விஷயத்தினை சொல்லி வருத்தப்படுகிறார்.

இதையும் படிங்க: விரட்டி விட்ட அஜித்!.. விக்னேஷ் சிவனுக்கு வாழ்க்கை தந்த விஜய் பட தயாரிப்பாளர்.. தளபதி தான் சொன்னாரா?..

இனிமே என்னால ஜெனி கூடவும், குழந்தை கூடவும் ஒன்னா இருக்க முடியாதும்மா என்கிறார். பாக்கியா அப்படியெல்லாம் இல்லை. நீ நினைக்கிறது நிச்சயம் நடக்கும் என சமாதானப்படுத்துகிறார். இதையடுத்து வீட்டுக்கு வரும் ஜோசப், மாலினியை செழியனுடன் அந்த ரெஸ்டாரெண்ட்டில் பார்த்ததாக சொல்ல மரியமும், ஜெனியும் அதிர்கின்றனர். இனிமே அந்த செழியன் உனக்கு வேண்டாம். தூக்கிப்போடு என்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Next Story