எப்பா தர்மபிரபு சீக்கிரம் இந்த மகா சங்கமத்த முடிச்சி விடுங்க.. முடியல எங்களால…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராஜீயும், கண்ணன் வாக்குவாதம் செய்து கொண்டு இருக்க அதை பாக்கியா கவனித்து விடுகிறார். பின்னர் அவர் பேசலாம் என முயற்சி செய்ய ஆனால் வேண்டாம் என நினைத்து விலகி விடுகிறார்.
அப்போ ஈஸ்வரியும், செழியனும் ஹோட்டலுக்கு வருகின்றனர். இங்க எதுக்கு ரூம் போட்ட சொந்தக்காரங்க வீட்டுக்கு போகலாம் தானே என்கிறார் ஈஸ்வரி. குழந்தையோட நம்ம மட்டும் போனா நல்லா இருக்காது எனச் செழியன் கூறிவிட சரி என்கிறார் ஈஸ்வரி. பின்னர் ரெடியாகி வர ஒரு கோயில் முன் வண்டியை நிறுத்துகிறார். இங்க எதுக்கு நிறுத்துன எனக் கேட்க சக்தி வாய்ந்த கோவிலாம் பாட்டி எனப் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஒரே குடும்பத்தில் இருந்து 7 நடிகர்கள்! யாரும் செய்யாத அந்த சாதனைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா?
அப்போ அங்கே எழிலும், பாக்கியாவும் வந்து விடுகின்றனர். அம்மாவை பார்க்க வந்தோம் என்கிறார் செழியன். பின்னர் குழந்தையை தூக்கிட்டு வந்தது தப்பு அத்தை. என்ன தப்பு நமக்கு உரிமை இல்லையா என்கிறார் ஈஸ்வரி. பின்னர் ஜெனி குடும்பமும் அங்கு வர ஈஸ்வரி மற்றும் செழியன் ஷாக் ஆகின்றனர். பின்னர் குழந்தையை கொடுத்து அவர்களை கிளம்ப சொல்கிறார் பாக்கியா.
ஆனால் ஈஸ்வரி இவன் என்னமோ தப்பு பண்ணிட்டான். அதுக்குனு எங்க குழந்தை இல்லாம போயிடுமா? உன்ன நாங்க என் குடும்பமா தானே பாத்தோம் என ஈஸ்வரி சொல்லியும் ஜெனி அங்கிருந்து நகர்ந்து சென்று விடுகிறார். செழியன் கெஞ்சி கடைசியில் கீழே உட்கார்ந்து அழுக தொடங்கிவிடுகிறார். ஈஸ்வரி பாக்கியாவை திட்டிவிட்டு காரில் போய் உட்கார்ந்து விடுகிறார்.
செழியனிடம் பாக்கியா பேச வர நீ எதுவும் சொல்லுவேன் தானேமா நான் இங்க வந்தேன் என்கிறார். என்ன சொல்லணும்பா? குழந்தையை அம்மா இல்லாமல் வளர்க்க முடியுமா எனக் கேட்கிறார். எழில் பெண் குழந்தையை அம்மாவை விட்டு பிரிக்க முடியாது என்கிறார். பின்னர் செழியனும் புரிந்துக்கொண்டு பாக்கியாவை கட்டிக்கொண்டு அழுகிறார். ராஜீ வீட்டில் எல்லாரும் அழுதுக்கொண்டு இருக்க முத்துவேல் திடீரென கதவை சாத்தி விடுகிறார்.
இதையும் படிங்க: ரோகினிக்கு தயாரான முதல் ஆப்பு!… எப்பா ஆடியன்ஸ் சந்தோஷமா உங்களுக்கு!…