அட இந்த சைக்கோ கதையை முடிச்சிவிடுங்கப்பா… ஒரு ஆளு அதை கூட அமிர்தாவால சமாளிக்க முடியலையா?..

Published on: February 21, 2024
---Advertisement---

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கதவைத் தட்டிக் கொண்டிருக்க திடீரென கணேஷ் வந்து நிற்கிறார்.  பயந்துட்டியா, பக்கத்துல இருக்க மார்க்கெட்டில் பூ வாங்க தான் போனேன். நமக்கு இன்னைக்கு கல்யாணம் தானே என்கிறார்.  அப்போ அங்கு ஒரு ஐயரும் வந்து இருக்க அமிர்தா ஐயரிடம் தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

 ஆனால் கணேஷ் ஐயரே நமது கல்யாணத்தை முடித்து வைத்தால்தான் இங்கிருந்து அவர் வெளியேற முடியும். நீ அவர்கிட்ட போய் உதவி கேட்கிறேன். போய் இந்த பட்டுப்புடவை மாற்றிக் கொண்டு வா என ஒரு சில பைகளை அவரிடம் கொடுக்கிறார்.  ஆனால் அமிர்தா முடியாது என அடம் பிடிக்க அவரை அறைந்து விடுகிறார் கணேஷ்.

இதையும் படிங்க: ‘பாய்ஸ்’ படத்துல நடிக்க வேண்டியது நான்தான்!.. மிஸ் ஆயிடுச்சி!. ஃபீல் பண்ணும் பிரபலம்!…

எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது உன்னை மட்டுமல்ல அந்த எழிலையும் கொன்று விடுவேன் என மிரட்டுகிறார்.  கணேஷ் மிரட்டலுக்கு பயந்த அமிர்தா போய் உடைகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்.  வெளியில் இருக்கும் கணேஷ் அமிர்தாவை சீக்கிரம் வா என தொல்லை செய்து கொண்டிருக்கிறார்.

அமிர்தா வெளியில் வந்தவுடன் அவருக்கு சரம்சரமாக மல்லி பூவை கொடுத்து  வைத்துக்கொள்ள சொல்கிறார்.  இந்த நேரத்தில் எழிலும் செழியனும் விடிந்தும் அமிர்தாவை தேடிக் கொண்டிருக்கின்றனர்.  அப்போ பழனிசாமி கால் செய்து அமிர்தாவை கடத்தி சென்ற வாகனத்தின் உரிமையாளர் முகவரியை தருகிறார்.  ஆனால் அவர் தந்த முகவரியில் இருப்பவர்கள் நாங்கள் இந்த வண்டியை விற்று ஒரு வருடம் ஆகிவிட்டதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: விஜய் அரசியலுக்கு போறதனால எல்லாம் தியேட்டர் வசூல் பாதிக்காது!.. ஓப்பனா உண்மையை சொன்ன பிரபலம்!..

ஐயர் மந்திரம் சொல்ல தாலி கட்ட ரெடியாகும் கணேஷ் அமிர்தாவிற்கு மாலை போட செல்கிறார்.  ஆனால் அமிர்தா களத்தில் எழில் கட்டிய தாலி இருக்க அதை கழட்ட வேண்டும் என அவரை மிரட்டுகிறார்.  இந்த நேரத்தில் எழிலும் செழியனும் அவர்கள் தங்கி இருந்த வீட்டை எப்படியோ கண்டுபிடித்து வந்து வண்டியை நிறுத்துகின்றனர்.

அதே நேரத்தில் பாக்யாவும் ஆட்டோவில் அங்கு வருகிறார்.  கணேஷ்  தாலியை கழட்ட  பிரச்சனை செய்து கொண்டிருக்க அமிர்தா முடியாது என தடுமாறிக் கொண்டிருக்கும் போது எழில் அங்கு நுழைவதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

இதையும் படிங்க: பாரதி கண்ணம்மா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அவர்தான்!.. பல வருடங்கள் கழித்து சேரன் சொன்ன தகவல்..

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.