Connect with us
boys

Cinema News

‘பாய்ஸ்’ படத்துல நடிக்க வேண்டியது நான்தான்!.. மிஸ் ஆயிடுச்சி!. ஃபீல் பண்ணும் பிரபலம்!…

Boys Movie: ஷங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படங்களில் பாய்ஸ் திரைப்படமும் ஒன்று. முற்றிலும் இளசுகளை வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதில் நடித்த ஐந்து நடிகர்களும் இன்று பெரிய பெரிய ஆளுமைகளாக இருக்கிறார்கள்.

சித்தார்த் இன்று சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறார். நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார். இசையமைப்பாளர் தமன் தமிழிலும் தெலுங்கிலும் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: மாஸ்டர் படமே காப்பிதான்!. எல்.சி.யூன்னா இதுதான்!. லோகேஷை பங்கம் செய்த புளூசட்ட மாறன்..

நடிகை ஜெனிலியா தமிழில் ஒரு முன்னணி நடிகையாகவே அறியப்பட்டவர். இப்போது திருமணமாகி செட்டிலாகி விட்டார். பரத்தும் அவ்வப்போது சிறந்த படங்களை கொடுத்து வருகிறார். மணிகண்டன் ஓரளவு அவர் வருமானத்திற்காக மீடியாக்களில் தலை காட்டி வருகிறார்.

gv prakash

இந்த நிலையில் முதலில் இந்தப் படத்தில் நடிக்க வேண்டியது ஜிவி பிரகாஷ்தானாம். அந்த நேரத்தில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாராம் ஜிவி பிரகாஷ். அந்த நேரத்தில் ஜிவி பாடிய பாடல்களை ஷங்கர் கேட்டிருக்கிறாராம். அதனால் ஈர்க்கப்பட்ட ஷங்கர் பாய்ஸ் படத்தில் இவரை நடிக்க வைத்து விடலாம் என எண்ணியிருக்கிறார்.

இதையும் படிங்க: இவங்க எந்த லெவலுக்கும் போவாங்க!.. விடமாட்டேன்!.. டிவிட்டரில் பொங்கிய திரிஷா….

ஆனால் ஜிவியின் தொடர்பு கிடைக்காததால் அவருக்கு பதில் சித்தார்த், பரத் போன்ற நடிகர்களை பயன்படுத்தியிருக்கிறார். இதை அந்நியன் படத்திற்காக பாடச்சென்ற ஜிவியிடம் ஷங்கர் கூறினாராம். அதேநேரம், ஷங்கரின் தயாரிப்பில் உருவான வெயில் படம் மூலம்தான் ஜிவி பிரகாஷ் சினிமாவில் இசையமைப்பாளராக மாறியது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top