நான் பெரிய ஆளுன்னு காட்ட இதை செய்யல!.. ரசிகர் மன்ற கூட்டத்தில் பேசிய எஸ்.கே!…

X
நான் பெரிய ஆளுன்னு காட்ட இதை செய்யல!.. ரசிகர் மன்ற கூட்டத்தில் பேசிய எஸ்.கே!…

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித்துக்கு பிறகு அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் இருக்கிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரை ரசிக்கிறார்கள். ஒருபக்கம், தனுஷுக்கு போட்டி நடிகராகவும் சிவகார்த்திகேயன் வளர்ந்துவிட்டார்.

தனுஷ் எப்படி சில நாட்களுக்கு முன்பு ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ‘மக்களுக்கு நல்லது செய்யுங்கள்’ என்று பேசினாரோ அதுபோலவே சிவகார்த்திகேயனும் சமீபத்தில் தனது நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை சந்தித்தார். அப்போது ‘தினமும் புத்தகம் வாசியுங்கள்.. உதவி செய்வதில் வேறு எந்த நோக்கமும் இல்லை.. தேவையில்லாத விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.. குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று அஜித் பாணியில் ரசிகர்களுக்கு அறிவுரையும் செய்தார்..

மேலும் ‘என்னை உருவாக்கியவர்கள் மக்களுக்கு ஏதாவது திருப்பி செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.. தினமும் சமூக பணி செய்வதோடு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நற்பணிகளை செய்ய திட்டமிட்டிருக்கிறோம்..

இதற்கு என்ன பலன் என்று கேட்கலாம்.. நிச்சயமாக அதற்கான பலன் நமக்கு கிடைக்கும்.. எம்.ஜி.ஆர், விஜயகாந்த் போல் உதவ வேண்டும் என்பதே என் நோக்கம்.. யாருக்காகவும், யாரையும் எதிர்ப்பதற்காகவும், நான் பெரியவன் என்ற போட்டிக்காகவும் இதை செய்யவில்லை’ என்று அவர் பேசியிருக்கிறார்.